திருப்பத்தூரில் தனியார் மருத்துவமனை டாக்டர்களுடன் ஆலோசனை - கலெக்டர் சிவன்அருள் தலைமையில் நடந்தது


திருப்பத்தூரில் தனியார் மருத்துவமனை டாக்டர்களுடன் ஆலோசனை - கலெக்டர் சிவன்அருள் தலைமையில் நடந்தது
x
தினத்தந்தி 24 July 2020 1:44 PM IST (Updated: 24 July 2020 1:44 PM IST)
t-max-icont-min-icon

திருப்பத்தூரில் கலெக்டர் சிவன்அருள் தனியார் மருத்துவமனைடாக்டர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

திருப்பத்தூர்,

திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகத்தில் இந்திய மருத்துவ சங்க மருத்துவர்கள் மற்றும் தனியார் மருத்துவமனை டாக்டர்களுடன் ஆலோசனை கூட்டம் கலெக்டர் சிவன்அருள் தலைமையில் நடந்தது.

கூட்டத்தில் கலெக்டர் பேசுகையில், ‘திருப்பத்தூர் மாவட்டத்தில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்திட மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தனியார் மருத்துவமனைகளில் சாதாரண காய்ச்சல், சளி, இருமல், ரத்த கொதிப்பு, சர்க்கரை, இருதய நோயாளிகள் மற்றும் பிற நோய்களால் தொடர் சிகிச்சை பெற்று வருபவர்களின் உடல்நிலையினை கண்காணித்து கொரோனா தொற்று பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு பரிந்துரை செய்ய வேண்டும். இல்லை என்றால் நோயாளிகளின் நிலை அறிந்து அவர்களுக்கு பரிசோதனை செய்து பார்த்து காய்ச்சல், சளியின் தன்மையை பொருத்து அரசு மருத்துவமனைக்கு பரிந்துரை செய்ய வேண்டும். மேலும் நோயாளிகளுக்கு கொரோனா தொற்று குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்திட வேண்டும்’ என்றார்.

இதில் சார் ஆட்சியர் (பொறுப்பு) அப்துல்முனீர், அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் டாக்டர் திலீப்பன், இந்திய மருத்துவ சங்க மருத்துவர்கள் பிரபாகரன், சுமதி, சிவக்குமார் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Next Story