கோவை அவினாசிலிங்கம் பல்கலைக்கழக பேராசிரியைக்கு கொரோனா உறுதி


கோவை அவினாசிலிங்கம் பல்கலைக்கழக பேராசிரியைக்கு கொரோனா உறுதி
x
தினத்தந்தி 25 July 2020 10:45 AM IST (Updated: 25 July 2020 10:27 AM IST)
t-max-icont-min-icon

கோவையில் உள்ள அவினாசிலிங்கம் பல்கலைக்கழக பேராசிரியைக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

கோவை,

கோவை-மேட்டுப்பாளையம் சாலையில் அவினாசிலிங்கம் பல்கலைக்கழகம் உள்ளது. இங்கு ஏராளமான பேராசிரியர்கள் பணியாற்றி வருகிறார்கள். இந்த நிலையில் இங்கு பணியாற்றும் பேராசிரியை ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

இதையடுத்து அவர் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிப்பட்டு உள்ளார். அங்கு அவருக்கு டாக்டர் கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். மேலும் அவர் தற்போது வரைக்கும் அந்த பல்கலைக்கழகத்துக்கு வந்து சென்றதால் அவர் பணியாற்றிய பகுதி கிருமி நாசினி தெளிக்கப்பட்டு தற்காலிகமாக மூடப்பட்டது.

அத்துடன் அவருடன் தொடர்பில் இருந்த சக பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் உள்பட 50-க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட உள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் பிளஸ்-2 பொதுத்தேர்வு வெளியான நாளில் இருந்து இந்த பல்கலைக்கழகத்தில் ஏராளமான பெற்றோர் மற்றும் மாணவிகள் குவிந்தனர்.

இதற்கிடையே, அங்கு பணியாற்றிய பேராசிரியைக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து அங்கு சென்ற அனைவரும் தற்போது அச்சத்தில் உள்ளனர்.

இதற்கிடையே அந்த பேராசிரியை வசித்து வந்த வீடு மற்றும் அந்த பகுதியில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, பிளச்சிங் பவுடர் போட்டு சுத்தம் செய்யப்பட்டது.

தொடர்ந்து அந்தப்பகுதியை சேர்ந்தவர்களுக்கு பாதிப்பு உள்ளதா என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள்.

Next Story