மாவட்ட செய்திகள்

மராட்டிய மாநிலத்தில் புதிதாக 9,431 பேருக்கு கொரோனா: தாராவியில் 2 பேருக்கு மட்டுமே பாதிப்பு + "||" + Maharashtra reports 9,431 new #COVID19 cases and 267 deaths today.

மராட்டிய மாநிலத்தில் புதிதாக 9,431 பேருக்கு கொரோனா: தாராவியில் 2 பேருக்கு மட்டுமே பாதிப்பு

மராட்டிய மாநிலத்தில் புதிதாக 9,431 பேருக்கு கொரோனா: தாராவியில் 2 பேருக்கு மட்டுமே பாதிப்பு
மராட்டிய மாநிலத்தில் இன்று புதிதாக 9,431 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தாராவி,

மராட்டியத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின் படி, கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 9,431 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் 267 பேர் பலியாகியுள்ளனர்.  அங்கு இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை  3,75,799 ஆக உயர்ந்துள்ளது. இதில் 1,48,601 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 2,13,328 பேர் குணமடைந்துள்ளனர். குணமடைவோர் விகிதம் 56.74 சதவிகிதமாக உள்ளது.

ஆசியாவின் மிகப் பெரிய குடிசைப் பகுதியான மும்பை தாராவியில் புதிதாக 2 பேருக்கு மட்டுமே தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து தாராவியில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 2,531 ஆக உயர்ந்துள்ளது. எனினும் 113 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர்.


தொடர்புடைய செய்திகள்

1. மராட்டியத்தில் இன்று மேலும் 7,347 பேருக்கு கொரோனா பாதிப்பு - மாநில சுகாதாரத்துறை தகவல்
மராட்டியத்தில் இன்று மேலும் 7,347 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. இலங்கையில் கொரோனா பாதிப்பு உயர்வு- பல இடங்களில் ஊரடங்கு அமல்
இலங்கையில் மீண்டும் கொரோனா தொற்று வேகமாக பரவத் தொடங்கியுள்ளது.
3. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 54,366- பேருக்கு கொரோனா
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 54 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
4. மருத்துவ பரிசோதனைக்கு முன்பே சீனாவில் 60 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி- உலக அரங்கில் அதிர்ச்சி
சீனாவில் தடுப்பூசி பரிசோதனைகள் முடியும் முன்பாகவே 60 ஆயிரம் பேருக்கு போடப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன.
5. அசாம், ஜார்க்கண்ட் மாநில கொரோனா பாதிப்பு விவரம்
அசாம் மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 666- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.