வள்ளியூர் நகரப்பஞ்சாயத்து அலுவலகத்தில் தூய்மை பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்
வள்ளியூர் நகரப்பஞ்சாயத்து அலுவலகத்தில் தூய்மை பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்.
வள்ளியூர்,
வள்ளியூர் நகரப்பஞ்சாயத்து பகுதிகளில் உள்ள குப்பைகளை சேகரிப்பதற்காக ஒப்பந்த அடிப்படையில் தூய்மை பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு முறையான ஊதியம் வழங்கப்படவில்லை என்றும், ஊதியத்தை வங்கி கணக்கில் செலுத்த வேண்டும் என்றும், வேலைக்கு வரும் தூய்மை பணியாளர்களை விட கூடுதலாக வேலைக்கு வந்தது போன்று கணக்கு காண்பித்து சம்பளத்தில் முறைகேடு செய்வதாக கூறியும் நேற்று காலையில் தூய்மை பணியாளர்கள் வேலைக்கு செல்லாமல் வள்ளியூர் நகரப்பஞ்சாயத்து அலுவலக வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்ததும் போலீசாரும், பஞ்சாயத்து அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தி விரைவில் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து தூய்மை பணியாளர்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Tags :
Next Story