முழு ஊரடங்கால் சாலைகள் வெறிச்சோடின


முழு ஊரடங்கால் சாலைகள் வெறிச்சோடின
x
தினத்தந்தி 27 July 2020 6:08 AM IST (Updated: 27 July 2020 6:08 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாவட்டத்தில் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கால் சாலைகள் வெறிச்சோடின. மருந்து கடைகள், பால் கடைகள் தவிர மற்ற அனைத்து கடைகளும் மூடப்பட்டன.

கோவில்பட்டி,

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த இந்த மாதத்தில் ஞாயிற்றுக்கிழமைதோறும் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன்படி 4-வது ஞாயிற்றுக்கிழமையான நேற்று முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. அதன்படி மருந்து கடைகள், பால் கடைகள் தவிர மற்ற அனைத்து கடைகளும் திறக்கப்படவில்லை.

இதனால் கோவில்பட்டி மெயின் ரோடு, எட்டயபுரம் ரோடு உள்ளிட்ட அனைத்து சாலைகளும் வெறிச்சோடின. கோவில்பட்டியில் காந்தி மைதானம், கூடுதல் பஸ் நிலைய வளாகம் ஆகிய இடங்களில் செயல்பட்ட தற்காலிக காய்கறி மார்க்கெட்டுகளும் மூடிக் கிடந்தன.

திருச்செந்தூர்

இதேபோன்று திருச்செந்தூர், ஏரல், காயல்பட்டினம், ஆறுமுகநேரி, ஆத்தூர், ஸ்ரீவைகுண்டம், கயத்தாறு, எட்டயபுரம், விளாத்திகுளம், நாசரேத், சாத்தான்குளம், உடன்குடி உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. மருந்து கடைகள், பால் கடைகள் தவிர மற்ற அனைத்து கடைகளும் திறக்கப்படாததால், வெறிச்சோடி காணப்பட்டது.

அனைத்து இடங்களிலும் மெயின் ரோடு பகுதிகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அத்தியாவசிய தேவைக்கு மாறாக, ஊரடங்கை மீறி வெளியில் திரிந்தவர்களை போலீசார் எச்சரித்து திருப்பி அனுப்பி வைத்தனர்.

Next Story