விருதுநகர் மாவட்டத்தில், ஒரே நாளில் 491 பேருக்கு கொரோனா; 5 பேர் பலி - பாதிப்பு எண்ணிக்கை 6,582 ஆக உயர்வு
விருதுநகர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 491 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ள நிலையில் மாவட்டத்தின் பாதிப்பு எண்ணிக்கை 6,582 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 5 பேர் இறந்தனர்.
விருதுநகர்,
விருதுநகர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 51,366 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்ததில் 6091 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆனது. 10,860 பேரின் மருத்துவ பரிசோதனை முடிவுகள் இன்னும் தெரிவிக்கப்படவில்லை. இதில் 3164 பேர் இதுவரை சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர். 7 சிறப்பு மையங்களில் 380 பேர் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.
நேற்று இந்த மாவட்டத்தில் 491 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. விருதுநகர் அல்லம்பட்டியை சேர்ந்த 26 வயது நபர், விவேகானந்தர் தெருவை சேர்ந்த 31 வயது பெண், சித்திரை வீதியை சேர்ந்த 58 வயது நபர், முத்துராமலிங்கம் நகரை சேர்ந்த 48 வயது நபர், பழைய அருப்புக்கோட்டை ரோட்டை சேர்ந்த 38 வயது பெண், ஆயுதப்படை போலீஸ் குடியிருப்பை சேர்ந்த 24 வயது பெண், 33 வயது நபர், பர்மாகாலனியை சேர்ந்த 31 வயது பெண், சீதக்காதி தெருவை சேர்ந்த 46 வயது நபர், இந்திராநகரை சேர்ந்த 73 வயது முதியவர், அரசு ஆஸ்பத்திரியில் பணியாற்றும் 32 வயது செவிலியர், கே.ஆர்.கார்டனில் வசிக்கும் 74 வயது முதியவர், கலெக்டர் அலுவலக வளாகத்தை சேர்ந்த 40 வயது பெண், பாண்டியன்நகரை சேர்ந்த 32 வயது பெண், கருப்பசாமிநகரை சேர்ந்த 15,16 வயது சிறுவர்கள், சூலக்கரையை சேர்ந்த 31 வயது நபர், ஆர்.எஸ்.ஆர். நகரை சேர்ந்த 41 வயது பெண் உள்ளிட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சிவகாசி பழனிச்சாமிநாடார் தெரு, நாடார் தெற்கு தெரு, பி.கே.எஸ்.ஏ. தெரு, அய்யனார் காலனி, காமராஜர் நகர், பெரியகுளம் காலனி, பாலாஜிநகர், எம்.பி.காலனி, போஸ் காலனி, முருகன் காலனி, விஸ்வநத்தம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் ராஜபாளையம், சுந்தரராஜபுரம், சுந்தரபாண்டியம், அழகாபுரி, ஸ்ரீவில்லிபுத்தூர், சுந்தரநாச்சியார்புரம், மீனாட்சிபுரம், அருள்புதூர், சேத்தூர், எஸ்.ராமலிங்காபுரம், சத்திரப்பட்டி, மம்சாபுரம், ஆமத்தூர், கன்னிச்சேரி, மாங்குடி, மேட்டுப்பட்டி, முகவூர், செட்டியார்பட்டி, குன்னூர், அருப்புக்கோட்டை, பாலையம்பட்டி, ஆத்திப்பட்டி, கஞ்சமநாயக்கன்பட்டி, ராமசாமிபட்டி, நடுவப்பட்டி, ஆர்.ஆர்.நகர், அயன்நத்தம்பட்டி, காடனேரி, கோட்டையூர், வத்திராயிருப்பு, மகராஜபுரம், வெம்பக்கோட்டை, கான்சாபுரம், கல்லூரணி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்றைய பாதிப்பில் சிவகாசியை சேர்ந்த 60-க்கும் மேற்பட்டவர்களும், ராஜபாளையத்தை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டவர்களும், சாத்தூரை சேர்ந்த 30 பேரும், ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியை சேர்ந்த 45 பேரும், வெம்பக்கோட்டை வட்டாரத்தை சேர்ந்த 60 பேரும் அடங்குவர்.
நேற்று விருதுநகர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 5 பேர் சிகிச்சை பலனின்றி இறந்தனர். இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 57 ஆக உயர்ந்துள்ளது.
இதன் மூலம் இந்த மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 6,582 ஆக உயர்ந்துள்ளது. நேற்று தெரிவிக்கப்பட்ட 491 முடிவுகளில் 202 முடிவுகள் மதுரை தனியார் பரிசோதனை மையத்தில் இருந்து வெளியிடப்பட்டுள்ளது. இந்த பரிசோதனை மையத்தில் கடந்த 22-ந்தேதி சோதனை மாதிரிகள் பெறப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் 4 நாட்களுக்கு பின்னர் நேற்று தான் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. சோதனை மாதிரிகள் கடந்த 22-ந்தேதிக்கு முன்னரே எடுக்கப்பட்டிருக்கும் நிலையில் முடிவுகள் தெரிய 6 நாட்களுக்கு மேல் ஆகும் நிலையில் நோய் பரவல் அதிகரிக்கும் நிலை தான் ஏற்படும்.
மாவட்ட நிர்வாகம் சோதனை முடிவுகள் விரைந்து தெரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறி வரும் நிலையில் உண்மை நிலவரப்படி முடிவுகள் தெரிவதற்கு ஒரு வாரம் ஆகும் நிலை உள்ளது. இதனை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது. நேற்றும் முடிவுகள் தெரிவிக்கப்பட்டதில் 30 சதவீதம் பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இன்னும் 10 ஆயிரம் பேருக்கு முடிவுகள் தெரிய வேண்டிய நிலையில் இதே நிலையில் பாதிப்பு ஏற்பட்டால் பாதிப்பு எண்ணிக்கை அடுத்த வாரம் 10 ஆயிரத்தை கடந்து விடும் என்ற அச்சம் எழுந்துள்ளது. மாவட்ட நிர்வாகம் உறுதி கூறியபடி நோய் தொற்றை கட்டுக்குள் கொண்டு வர அடுத்த வாரத்திற்குள்ளாவது நடவடிக்கை எடுக்கப்பட்டாக வேண்டும்.
Related Tags :
Next Story