திருப்பூர் மாவட்டத்தில், மேலும் 32 பேருக்கு கொரோனா - பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 700 ஆக உயர்வு
திருப்பூர் மாவட்டத்தில் மேலும் 32 பேருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 700 ஆக உயர்ந்தது.
திருப்பூர்,
திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. அந்த அளவிற்கு பாதிப்பு இருந்து வருகிறது. கடந்த ஒரு வாரமாக 30-க்கும் மேலாகவே பாதிப்பு எண்ணிக்கை இருக்கிறது. நேற்று முன்தினம் மட்டும் 51 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.
இதுபோல் தமிழகத்தில் பிற மாவட்டங்களிலும் கொரோனாவின் தாக்கம் அதிகமாக இருந்து வந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் நேற்று மேலும் 32 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இவர்கள் அனைவரும் மேல் சிகிச்சைக்காக கோவை இ.எஸ்.ஐ. மற்றும் திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
அதன்படி திருப்பூர் எம்.எஸ்.நகரை சேர்ந்த 35 வயது ஆண், அனுப்பர்பாளையம் காந்திரோட்டை சேர்ந்த 3 வயது சிறுவன், அவினாசி நரசா தெருவை சேர்ந்த 44 வயது ஆண், திருப்பூர் வி.ஜி.வி. கார்டனை சேர்ந்த 16 வயது ஆண், 13 வயது சிறுமி, கோவில்பாளையம் 6 வயது சிறுமி, 14 வயது சிறுவன், அமராவதிபாளையம் 6-வது தெருவை சேர்ந்த 50 வயது ஆண், தென்னம்பாளையத்தை சேர்ந்த 54 வயது பெண், கருவம்பாளையம் நடராஜ் காம்பவுண்டை சேர்ந்த 70 வயது ஆண், வடுகபாளையத்தை சேர்ந்த 7 வயது சிறுமி, எழுவந்தி மொசுவம்பாளையத்தை சேர்ந்த 4 வயது சிறுமி, 52 வயது பெண், பாண்டியன்நகரை சேர்ந்த 37 வயது பெண், அருள்புரம் உப்பிலிபாளையத்தை சேர்ந்த 60 வயது பெண், பலவஞ்சிபாளையத்தை சேர்ந்த 46 வயது ஆண், எஸ்.வி.காலனியை சேர்ந்த 27 வயது ஆண்.
பெரியபாளையத்தை சேர்ந்த 60 வயது பெண், வெள்ளியங்காடு கே.எம்.நகரை சேர்ந்த 53 வயது பெண், பெதப்பம்பட்டியை சேர்ந்த 3 வயது சிறுமி, 47 வயது பெண், அவினாசி கவுண்டம்பாளையத்தை சேர்ந்த 8 வயது சிறுமி, 21 வயது பெண், 18 வயது ஆண், ராம்நகர் முதல் தெருவை சேர்ந்த 50 வயது ஆண், கொங்குமெயின்ரோடு அருந்ததியர் காலனியை சேர்ந்த 47 வயது ஆண், அப்பாச்சி நகரை சேர்ந்த 37 வயது பெண், திருப்பூரை சேர்ந்த 19 வயது ஆண், ஆண்டிபாளையத்தை சேர்ந்த 53 வயது ஆண், இந்திராநகர் சந்திராபுரத்தை சேர்ந்த 58 வயது பெண், வெங்கமேடு செட்டிபாளையத்தை சேர்ந்த 36 வயது ஆண், தாராபுரம் பெருமாள்புரத்தை சேர்ந்த 50 வயது ஆண்.
இதைத்தொடர்ந்து தற்போது மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 700 ஆக உயர்ந்துள்ளது.
Related Tags :
Next Story