புதுச்சேரியில் ஐந்தில் ஒருவருக்கு தொற்று கவர்னர் கிரண்பெடி பகீர் தகவல்


புதுச்சேரியில் ஐந்தில் ஒருவருக்கு தொற்று கவர்னர் கிரண்பெடி பகீர் தகவல்
x
தினத்தந்தி 27 July 2020 10:01 PM GMT (Updated: 27 July 2020 10:01 PM GMT)

புதுச்சேரியில் ஐந்தில் ஒருவருக்கு தொற்று பரவி உள்ளது என்று கவர்னர் கிரண்பெடி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி,

மக்கள் தங்கள் சொந்த பாதுகாப்பிற்கும், மற்றவர்களுக் கான வேலைகளிலும் விழிப்புடன் இருக்கிறார்கள். தங்களுடைய வேலை, வாழ்க்கை, உணவு, பகிர்வு, கொண்டாட்டங்கள், நிறுவனம் வைத்திருத்தல், ஷாப்பிங், தனிப்பட்ட சுகாதாரம் போன்ற அவர் களின் தனிப்பட்ட பழக்க வழக்கங்களில் கவனமுடன் செயல்பட வேண்டும். ஏனெனில் கொரோனா தொற்றை தடுக்கக்கூடிய மருந்தினை கண்டுபிடிக்கும் வரை அதை அலட்சியம் செய்யும் எந்த சிறிய செயலிலும் ஈடுபட வேண்டாம். இதனால் தொற்று பரவுவதை கட்டுப் படுத்த முடியும்.

இந்த தொற்றால் பாதிக்கப்பட்டவரை தொடர்பு கொள்ளும் அனைவரும் உடனடியாக பாதிக்கப்படுவார்கள். இதைக் கட்டுப்படுத்துவதற்கான புதிய வழிமுறையை பின்பற்றுவது பற்றி ஒட்டுமொத்த சமுதாயத்திற்கும் தெரியாது. குறிப்பாக முதியவர்களுக்கும், குழந்தைகளுக்கும், அரசு நிர்வாகம் கொரோனா தடுப்பு பணிகளையும், சிகிச்சையையும் தொடர்ந்து அதிகரிக்க வேண்டும்.

சவால் அதிகம்

புதுச்சேரியில் கொரோனா சவால் மிக அதிகமாக உள்ளது. ஏனெனில் இது தமிழ்நாட்டு மக்களுடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இன்னும் ஊரடங்கு முழுமையாக தளர்த்தப்படவில்லை. மக்கள் தங்கள் சுய நலனுக்காகவும், பாதுகாப்பிற்காகவும் சுய ஒழுங்குடன் இருக்க வேண்டும். விதிகளை மீறினால் தண்டிக்கப்படுவோம் என்ற பயத்தில் செய்யக்கூடாது. உங்களுடைய பாதுகாப்புதான் உங்களுக்கு இன்றியமையாதது.

கட்டுப்பாட்டு மண்டலங்கள் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட நபர்கள் தங்கள் சொந்த பாதுகாப்பிற்காகவும், மற்றவர்களுடைய பாதுகாப்பிற்காகவும் கண்டிப்பாக அரசின் வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டும். தரவுப்படி புதுச்சேரியில் ஐந்தில் ஒருவருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.

ஒத்துழைப்பு

தனிமைப்படுத்தப்பட்ட அல்லது கட்டுப்பாட்டு மண்டலங்களில் உள்ள நோயாளிகளுக்கான சரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கும்போது ஒரு சமூக ஆதரவு அமைப்பாக இருக்க வேண்டும். மேலும் அவர்களுக்கு தேவையான எந்த உதவிக்கும் 104 என்ற எண்ணை தொடர்பு கொண்டு தெரியப்படுத்த வேண்டும். அனைவருடைய ஒட்டுமொத்த பரஸ்பர புரிதல், ஒத்துழைப்பு, ஒருங்கிணைப்புடன் செயல்பட்டால் புதுச்சேரியில் கொரோனாவை பரவலை கட்டுப்படுத்த முடியும்.

இந்த நோயினால் எளிதில் பாதிப்பு ஏற்படக்கூடியவர்கள் குழந்தைகள், வயதானவர்கள் தான். ஏற்கனவே வேறு நோய்களால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்துக்கொண்டிருப்பவர்கள் ஆகியோர் இந்த கொரோனாவை எதிர்த்து போராட வலுவான நோய் எதிர்ப்பு சக்தி தேவைப்படுகிறது. ஆயுர்வேத துறையால் அங்கீகரிக்கப்பட்ட ஆயுஷ் மருந்துகளை வீட்டில் பயன்படுத்துவதன் மூலம் மக்கள் தங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக்கொள்ள வேண்டும். கொரோனாவை எதிர்த்து போராடுவது இப்போது ஒரு மக்கள் இயக்கமாக மாற வேண்டும். அனைவரும் பொறுப்பாக இருந்து தங்களது கடமையை ஒவ்வொருவரும் முழுமையாக ஆற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story