கயத்தாறில் பரபரப்பு: எரிந்த நிலையில் கிடந்த வாலிபரின் எலும்புக்கூடு கொலையா? போலீசார் விசாரணை
கயத்தாறில் எரிந்த நிலையில் கிடந்த வாலிபரின் எலும்புக்கூடால் பரபரப்பு ஏற்பட்டது. அவர் எரித்துக் கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கயத்தாறு,
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு பாரதி நகரில் லியாகத் அலி என்பவருக்கு சொந்தமான விவசாய நிலம் உள்ளது. தற்போது அங்கு விவசாயம் செய்யாததால், சீமை கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்து தரிசாக உள்ளது. நேற்று காலையில் அந்த நிலத்தில் முள்வேலிக்கு இடையில் வாலிபர் ஒருவர் எரிந்த நிலையில் எலும்புக்கூடாக கிடந்தார். அந்த வழியாக சென்றவர்கள், இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து கயத்தாறு போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். உடனே கோவில்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு கலைக்கதிரவன், கயத்தாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்து மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
போலீசார் விசாரணை
சம்பவ இடத்தில் தடயவியல் நிபுணர்கள் சென்று தடயங்களை சேகரித்தனர். அங்கு வாகனம் சென்று வந்ததற்கான தடம், நிலத்தில் பதிவாகி இருந்தது. அது எந்த வாகனம் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். தீயில் எரிந்து எலும்புக்கூடாக கிடந்த வாலிபருக்கு 35 வயது முதல் 40 வயதுக்குள் இருக்கலாம் என்று தடயவியல் நிபுணர்கள் தெரிவித்தனர்.
வாலிபரின் எலும்புக் கூட்டை போலீசார் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக் காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
எரித்துக்கொலையா?
எலும்புக்கூடாக கிடந்த வாலிபர் யார்?, அவர் எரித்துக் கொலை செய்யப்பட்டாரா?, அவரை வேறு எங்கேனும் கொலை செய்து, அடையாளம் தெரியாமல் இருப்பதற்காக, இங்கு வந்து எரித்தனரா? என பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Tags :
Next Story