5 ஊழியர்களுக்கு கொரோனா: கோவில்பட்டி கோர்ட்டு மூடப்பட்டது தூத்துக்குடி பூமார்க்கெட் இடமாற்றம்
கோவில்பட்டி கோர்ட்டில் பணியாற்றும் 5 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை தொடர்ந்து, கோர்ட்டு மூடப்பட்டது. இதேபோன்று தூத்துக்குடி பூமார்க்கெட்டில் வியாபாரிகள் 9 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதால், பூமார்க்கெட் இடமாற்றப்பட்டது.
கோவில்பட்டி,
கோவில்பட்டி சப்- கோர்ட்டு, முதலாவது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு, 2-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு, விரைவு கோர்ட்டு ஆகியவற்றில் பணியாற்றும் ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் 5 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்து வருகின்றனர்.
தொடர்ந்து மாவட்ட முதன்மை நீதிபதியின் அறிவுரையின்படி, கோவில்பட்டியில் உள்ள அனைத்து கோர்ட்டுகளும் நேற்று முதல் நாளை மறுநாள் (புதன்கிழமை) வரையிலும் 3 நாட்கள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து கோர்ட்டுகளில் சுகாதார துறையினர் கிருமிநாசினி தெளித்தனர்.
தூத்துக்குடி
தூத்துக்குடி பூமார்க்கெட்டில் உள்ள வியாபாரிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 9 வியாபாரிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் பூமார்க்கெட் நேற்று மூடப்பட்டது. தொடர்ந்து அந்த பகுதியில் கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் நடந்து வருகின்றன.
இதைத் தொடர்ந்து பூமார்க்கெட்டு அருகில் உள்ள தற்காலிக பஸ் நிலையத்துக்கு மாற்றம் செய்யப்பட்டது. அங்கு பூ வியாபாரிகள் வழக்கம்போல் வியாபாரம் செய்தனர்.
உடன்குடி
உடன்குடி பகுதியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. உடன்குடியில் நேற்று பெண் உள்பட 5 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். உடன்குடி புதுமனை தெருவில் 32 வயது பெண், 36 வயது ஆண், வடக்கு புது தெருவில் 43 வயது ஆண், பரமன்குறிச்சி என்.எஸ்.கே. தெருவில் 56 வயது ஆண், 18 வயது ஆண் ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். அவர் களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்து வருகின்றனர்.

Related Tags :
Next Story