கோவில்பட்டி அருகே வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்


கோவில்பட்டி அருகே வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 28 July 2020 5:27 AM IST (Updated: 28 July 2020 5:27 AM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டி அருகே வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவில்பட்டி,

விவசாயத்துக்கு இலவச மின்சாரத்தை ரத்து செய்யக்கூடாது. அத்தியாவசிய பொருட்கள் அவசர சட்டம், வேளாண் விளைபொருட்கள் வணிக ஊக்குவிப்பு அவசர சட்டம் போன்றவற்றை திரும்ப பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கோவில்பட்டி அருகே பெருமாள்பட்டியில் அகில இந்திய விவசாயிகள் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவினர் நேற்று தங்களது வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி, வீடுகளின் முன்பாக கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

முன்னாள் எம்.எல்.ஏ. அய்யலுசாமி தலைமை தாங்கினார். இந்திய கம்யூனிஸ்டு மாநில குழு உறுப்பினர் பாலமுருகன், கிளை செயலாளர் நாராயணசாமி, விவசாயிகள் சங்க தாலுகா செயலாளர் லெனின்குமார், பஞ்சாயத்து தலைவர் முரளி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ம.தி.மு.க.

மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கோவில்பட்டி புது ரோடு பகுதியில் உள்ள நகர கூட்டுறவு வங்கி முன்பாக ம.தி.மு.க.வினர் வடக்கு மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.ரமேஷ் தலைமையில் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மாநில பொதுக்குழு உறுப்பினர் தெய்வேந்திரன், மாநில விவசாய அணி துணை செயலாளர் ராமச்சந்திரன், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் சரவணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Next Story