ஊரடங்கை மீறி சாலையில் சுற்றித்திரிந்தவர்களிடம் 90 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்


ஊரடங்கை மீறி சாலையில் சுற்றித்திரிந்தவர்களிடம்   90 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 28 July 2020 5:42 AM IST (Updated: 28 July 2020 5:42 AM IST)
t-max-icont-min-icon

கள்ளக்குறிச்சியில் ஊரடங்கை மீறி சாலையில் சுற்றி திரிந்தவர்களிடம் இருந்து 90 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.

கள்ளக்குறிச்சி, 

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் நேற்று முன்தினம் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதையொட்டி கள்ளக்குறிச்சியில் மருந்தகம், பால்கடையை தவிர அனைத்து கடைகளும் மூடப்பட்டன. மேலும் சாலைகளில் வாகனங்கள் செல்வதற்கும் அனுமதி இல்லை. இதை கண்காணிக்கும் வகையில் மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். கள்ளக்குறிச்சியில் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜியகுமார் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் செல்வநாயகம், மணிகண்டன் மற்றும் போலீசார் நடத்திய வாகன சோதனையில் ஊரடங்கை மீறி சாலையில் சுற்றி திரிந்தவர்களிடம் இருந்து 90 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.

Next Story