கள்ளக்குறிச்சி அருகே வாகனம் மோதி வாலிபர் பலி
கள்ளக்குறிச்சி அருகே வாகனம் மோதி வாலிபர் பலியானார்.
கள்ளக்குறிச்சி,
கள்ளக்குறிச்சி அருகே உலகங்காத்தான் கிராமத்தை சேர்ந்தவர் சின்னசாமி மகன் அலெக்ஸ்சூர்யா(வயது 29). இவருக்கு திருமணமாகி 2 ஆண்டுகள் ஆகிறது. மனைவி எழிலரசி கள்ளக்குறிச்சியில் உள்ள அவரது தாய் வீட்டில் தங்கி இருக்கிறார். இந்த நிலையில் மனைவியை பார்ப்பதற்காக அலெக்ஸ்சூர்யா உலகங்காத்தான் கிராமத்தில் இருந்து மோட்டார் சைக்கிளில் கள்ளக்குறிச்சி நோக்கி சென்று கொண்டிருந்தார். தச்சூர் கைகாட்டியில் உள்ள செல்போன் டவர் அருகே வந்தபோது அந்த வழியாக சென்ற வாகனம் ஒன்று அலெக்ஸ் சூர்யா மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து பற்றி தகவல் அறிந்த கள்ளக்குறிச்சி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அலெக்ஸ் சூர்யாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story