போக்குவரத்து சீரமைப்பு பணிகளை கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு


போக்குவரத்து சீரமைப்பு பணிகளை  கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு
x
தினத்தந்தி 28 July 2020 6:36 AM IST (Updated: 28 July 2020 6:36 AM IST)
t-max-icont-min-icon

தேனி அல்லநகரம் நகராட்சி பகுதிகளில் நடந்த போக்குவரத்து சீரமைப்பு பணிகளை கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

தேனி,

தேனி அல்லநகரம் நகராட்சி பகுதிகளில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில், சமூக இடைவெளியை கடைபிடிக்கும் பொருட்டு போக்குவரத்து சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. அதன்படி கடைகளின் முன்பு வாகனங்களை நிறுத்த தடை விதித்து நகரில் வாகனங்களை நிறுத்த தனியாக இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. சாலைகளில் வாகனங்கள் நிறுத்தும் இடத்தை அடையாளப்படுத்தும் வகையில் சாலையில் போலீசார் கோடுகளை வரைந்துள்ளனர். பிரதான சாலைகளான பெரியகுளம் சாலை, மதுரை சாலை, கம்பம் சாலை ஆகிய சாலைகளில் கூடுதல் எண்ணிக்கையில் நேற்று போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இந்த போக்குவரத்து சீரமைப்பு பணிகளை மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய்சரண் தேஜஸ்வி ஆகியோர் நேற்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். ஆய்வின் போது, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் கவிதா, போலீஸ் துணை சூப்பிரண்டுகள் முத்துராஜ், முத்துக்குமார், நகராட்சி ஆணையாளர் நாகராஜ் மற்றும் அரசு துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Next Story