அ.தி.மு.க. சார்பில் 1,000 பேருக்கு நிவாரண பொருட்கள் எம்.எல்.ஏ.க்கள் வழங்கினர்


அ.தி.மு.க. சார்பில் 1,000 பேருக்கு நிவாரண பொருட்கள்   எம்.எல்.ஏ.க்கள் வழங்கினர்
x
தினத்தந்தி 28 July 2020 7:02 AM IST (Updated: 28 July 2020 7:02 AM IST)
t-max-icont-min-icon

ஈரோட்டில் அ.தி.மு.க. சார்பில் 1,000 பேருக்கு கொரோனா நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

ஈரோடு, 

ஈரோடு மாநகராட்சி 55-வது வார்டுக்கு உட்பட்ட அக்ரஹார வீதி, பொன்வீதி, வளையக்கார வீதி, கச்சேரி வீதி உள்பட 11 பகுதிகளில் அ.தி.மு.க. சார்பில் கொரோனா நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு முன்னாள் மண்டலக்குழு தலைவர் மனோகரன் தலைமை தாங்கினார்.

எம்.எல்.ஏ.க்கள் கே.வி.ராமலிங்கம், கே.எஸ்.தென்னரசு ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு வீடு, வீடாக சென்று பொதுமக்களுக்கு 5 கிலோ அரிசி இலவசமாக வழங்கினார்கள். மொத்தம் 1,000 பேருக்கு அரிசி வழங்கப்பட்டது. இதில் முன்னாள் கவுன்சிலர்கள் சுப்பிரமணியம், ராஜேஸ்வரி, வீரா.செந்தில்குமார், அரசு வக்கீல் துரைசக்திவேல் உள்பட பலர் கலந்து கொண்டார்கள்.

Next Story