ஊமச்சிகுளம், நிலையூரில் நாளை மின்சாரம் நிறுத்தம்


ஊமச்சிகுளம், நிலையூரில் நாளை மின்சாரம் நிறுத்தம்
x
தினத்தந்தி 28 July 2020 7:31 AM IST (Updated: 28 July 2020 7:31 AM IST)
t-max-icont-min-icon

மதுரை மாவட்டம் திருப்பாலை துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடக்க இருப்பதால் ஊமச்சிகுளம், நிலையூர் பகுதிகளில் நாளை மின் வினியோகம் இருக்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மதுரை, 

திருப்பாலை துணை மின் நிலையத்தில் நாளை (புதன்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்க உள்ளது. இதனால் இந்த துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட திருப்பாலை, நாராயணபுரம், ஆத்திகுளம், அய்யர்பங்களா, வள்ளுவர் காலனி, விஸ்வநாதபுரம், குலமங்கலம், கண்ணனேந்தல், சூர்யா நகர், ஊமச்சிகுளம், அலங்காநல்லூர் தேசிய சர்க்கரை ஆலை, வலையபட்டி, கடச்சனேந்தல், மகாலட்சுமி நகர் பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை மின்வினியாகம் இருக்காது. இந்த தகவலை மதுரை கோ.புதூர் வடக்கு மின்பகிர்மான செயற்பொறியாளர் மலர்விழி தெரிவித்துள்ளார்.

மேலும் திருப்பரங்குன்றம் பிரிவுக்கு உட்பட்ட நிலையூர் உயர் மின்னழுத்த பாதையில் நாளை பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதனால் நிலையூர், கைத்தறி நகர், ஜெ.ஜெ.நகர், ஓம்சக்தி நகர், பெத்தேல் நகர் ஆகிய பகுதிகளில் காலை 10.30 மணி முதல் மதியம் 2.30 மணி வரை மின் வினியோகம் இருக்காது. இந்த தகவலை திருமங்கலம் மின்பகிர்மான செயற்பொறியாளர் ஆறுமுகராஜ் தெரிவித்துள்ளார்.

Next Story