கொரோனா தொற்று பரவாமல் தடுக்க பொதுமக்கள் முககவசம் அணிய நடவடிக்கை எடுக்க வேண்டும் கார்த்தி சிதம்பரம் எம்.பி. வலியுறுத்தல்


கொரோனா தொற்று பரவாமல் தடுக்க   பொதுமக்கள் முககவசம் அணிய நடவடிக்கை எடுக்க வேண்டும்   கார்த்தி சிதம்பரம் எம்.பி. வலியுறுத்தல்
x
தினத்தந்தி 28 July 2020 3:26 AM GMT (Updated: 28 July 2020 3:26 AM GMT)

கொரோனா தொற்று பரவாமல் தடுக்க பொதுமக்கள் முககவசம் அணிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகள் ஆலோசனை கூட்டத்தில் கார்த்தி சிதம்பரம் எம்.பி. தெரிவித்தார்.

சிவகங்கை,

சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவாமல் தடுக்க எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்த அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. சிவகங்கை தொகுதி எம்.பி. கார்த்தி சிதம்பரம் தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் மருத்துவ கல்லூரி முதல்வர் ரெத்தினவேல், மருத்துவகல்லூரி மருத்துவ அலுவலர் மீனாள், சுகாதாரத்துறை இணைஇயக்குனர் இளங்கோ மகேசுவரன், ஊரகவளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வடிவேல், மகளிர் திட்ட அலுவலர் அருண்மணி, துணை இயக்குனர்கள் யசோதாமணி, யோகவதி, ஊராட்சிகள் உதவி இயக்குனர் விஜயநாதன், பேரூராட்சிகள் உதவி இயக்குனர் ராஜா மற்றும் நகராட்சி ஆணையாளர்கள், அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் ஒவ்வொரு அதிகாரியும் தங்கள் பகுதிகளில் கொரோனா தொற்று பரவாமல் இருக்க எடுத்துவரும் நடவடிக்கைகள் குறித்தும் கொரோனா சிகிச்சையில் எத்தனை பேர் உள்ளனர். எத்தனை பேர் குணமடைந்து வீடுதிரும்பி உள்ளனர் என்று தெரிவித்தனர்.

நடவடிக்கை

பின்னர் கார்த்தி சிதம்பரம் எம்.பி. பேசியதாவது:-

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய வேண்டும். அனைவரையும் குணப்படுத்த வேண்டும். மேலும் நோய் தாக்குதலால் இறந்தவர்களின் உடலை வழங்கும்போது மதசடங்குகளை பின்பற்ற உதவ வேண்டும். அத்துடன் அனைத்து பொதுமக்களும் முககவசம் அணிய உரிய முறையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story