மின்சார, வேளாண் அவசர சட்டத்தை திரும்ப பெறக்கோரி விவசாயிகள் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்
மின்சார, வேளாண் அவசர சட்டத்தை மத்திய அரசு திரும்ப பெறக்கோரி விவசாயிகள் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
திருவாரூர்,
அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக்குழு மற்றும் அனைத்து விவசாயிகள் சங்கங்களின் சார்பில் கருப்புக்கொடி ஏற்றி மின்சார, வேளாண் அவசர சட்டத்தை மத்திய அரசு திரும்ப பெற கோரி ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அறிவித்து இருந்தனர். அதன்படி நேற்று திருவாரூரில் இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மற்றும் விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சி அலுவலகங்கள் முன்பு விவசாயிகள் சங்கத்தினர் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆர்ப்பாட்டத்திற்கு விவசாயிகள் போராட்டம் ஒருங்கிணைப்புக்குழு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மாசிலாமணி தலைமை தாங்கினார். இதில் விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் தம்புசாமி, விவசாயிகள் நலச்சங்க தலைவர் சேதுராமன், செயலாளர் ராமமூர்த்தி, விடுதலை சிறுத்தை கட்சி மாவட்ட செயலாளர் வடிவழகன், நிர்வாகி குணாளன், ம.தி.மு.க. கொள்கை பரப்பு மாநில துணை செயலாளர் சீனிவாசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
திருத்துறைப்பூண்டி
இதேபோல் திருத்துறைப்பூண்டி பழைய பஸ் நிலையம், பள்ளங்கோவில், ஆலத்தம்பாடி ஆகிய 3 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு தி.மு.க. நகர செயலாளர் பாண்டியன் தலைமை தாங்கினார். முன்னாள் எம்.பி. விஜயன், முன்னாள் எம்.எல்.ஏ. பழனிச்சாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் நாகராஜன், விடுதலை சிறுத்தை மாவட்ட செயலாளர் செல்வன், ம.தி.மு.க. நகர செயலாளர் சேகர் ஆகியோர் முன்னிலைவகித்தனர்.
இதில் முன்னாள் எம்.எல்.ஏ உலகநாதன், விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட பொருளாளர் சாமிநாதன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் நகர செயலாளர் ரகுராமன், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் நகர செயலாளர் முருகேசன் உள்பட பலர் கலந்துகொண்டு கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் செய்தனர். பள்ளங்கோவிலில் நடைபெற்ற ஆர்பாட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய செயலாளர் பாலு தலைமை தாங்கினார். தி.மு.க. ஒன்றிய செயலாளர் பிரகாஷ், முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் தமிழ்ச்செல்விராஜா, விவசாய சங்க மாவட்ட துணைச்செயலாளர் ராஜா, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் ஜோசப் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மன்னார்குடி
மன்னார்குடி பெரியார் சிலை அருகில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு நகர செயலாளர் கலியபெருமாள் தலைமை தாங்கினார். இதில் நகர தலைவர் ராஜ்குமார், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் நகர செயலாளர் கலைச்செல்வன், காங்கிரஸ் கட்சி நகர தலைவர் கனகவேல், ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் பாலச்சந்திரன், நகர செயலாளர் சன்சரவணன், தி.மு.க. விவசாயி அணி நகர செயலாளர் அசோகன், விவசாயிகள் சங்க நகர செயலாளர் மாரிமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து கையெழுத்து இயக்கம் நடந்தது.
இதேபோல மன்னார்குடி பழைய பஸ் நிலையம் அருகில் உள்ள இந்திய கம்யூனிஸ்டு கட்சி அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் சங்கங்களின் கூட்டமைப்புகளின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் செல்வராஜ் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் வீரமணி முன்னிலை வகித்தார். இதில் இளைஞர் பெருமன்ற மாவட்ட செயலாளர் துரை.அருள்ராஜன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ரெகுபதி, விவசாயிகள் சங்க ஒன்றிய செயலாளர் சதாசிவம், நகர செயலாளர் கலியபெருமாள், இளைஞர் பெருமன்ற செயலாளர் ஒன்றிய செயலாளர் பாப்பையன், விவசாயிகள் சங்க ஒன்றிய தலைவர் ராஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
நன்னிலம்
நன்னிலம் ஒன்றியம், கொல்லுமாங்குடியில் ம.தி.மு.க. சார்பில் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு நன்னிலம் ஒன்றிய செயலாளர் சிவா தலைமை தாங்கினார். மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் கலிபுல்லா முன்னிலை வகித்தார். இதில் நகர செயலாளர் காமராஜ், ஒன்றிய அவைத்தலைவர் துரைராஜ், ஒன்றிய பொருளாளர் ராஜ், மாவட்ட பிரதிநிதி அறிவழகன், ஒன்றிய சிறுபான்மை பிரிவு செயலாளர் ஷேக் அலாவுதீன் ஆகியோர் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பினர்.
Related Tags :
Next Story