திருப்பூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 39 பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 737 ஆக உயர்வு
திருப்பூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 39 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 737 ஆக உயர்ந்துள்ளது.
திருப்பூர்,
இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊரடங்கு வருகிற 31-ந் தேதி வரை விதிக்கப்பட்டுள்ளது. தற்போது 6-வது கட்ட ஊரடங்கு அமலில் உள்ளது.
இதன் காரணமாக ஒரு சில தளர்வுகளும் விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் பொது போக்குவரத்து முழுவதும் முடக்கப்பட்டுள்ளது. இந்த நிலையிலும் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் இல்லை. தமிழகத்தில் நேற்று ஒரு நாளில் மட்டும் 6 ஆயிரத்து 993 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதன்படி திருப்பூர் மாவட்டத்திலும் நேற்று ஒரே நாளில் 39 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
737 ஆக உயர்வு
அதன்படி திருப்பூர் வெங்கமேடு பகுதியை சேர்ந்த 50 வயது ஆண், குமரன் காலனியை சேர்ந்த 86 வயது ஆண், அர்த்தநாரிசெட்டியார் தெருவை சேர்ந்த 30 வயது ஆண், இடுவம்பாளையத்தை சேர்ந்த 50 வயது ஆண், குண்டடத்தை சேர்ந்த 20 வயது பெண், அனுப்பர்பாளையத்தை சேர்ந்த 47 வயது பெண், தாராபுரம்காந்திபுரத்தை சேர்ந்த 34 வயது ஆண், மண்ணரையை சேர்ந்த 55 வயது பெண், பாளையக்காட்டை சேர்ந்த 28 வயது பெண், பல்லடம் வடுகபாளையம்புதூரை சேர்ந்த 62 வயது ஆண், பெரியாண்டிபாளையத்தை சேர்ந்த 48 வயது ஆண், கழுவேரிபாளையத்தை சேர்ந்த 29 வயது ஆண், தென்னம்பாளையத்தை சேர்ந்த 35 வயது ஆண், குருவாயூரப்பன்நகரை சேர்ந்த 18 வயது பெண், 35 வயது பெண், தாராபுரம் ரோட்டை சேர்ந்த 47 வயது ஆண், சிறுபூலுவப்பட்டியை சேர்ந்த 62 வயது ஆண், தேவம்பாளையத்தை சேர்ந்த 50 வயது ஆண், சாமுண்டிபுரத்தை சேர்ந்த 75 வயது ஆண், கண்ணபிரான் நகரை சேர்ந்த 30 வயது ஆண்.
சிறுபூலுவப்பட்டியை சேர்ந்த 12 வயது சிறுவன், திருப்பூரை சேர்ந்த 50 வயது ஆண், இடுவம்பாளையத்தை சேர்ந்த 59 வயது ஆண், ஈஸ்வரன் கோவில் வீதியை சேர்ந்த 49 வயது பெண், பலவஞ்சிபாளையத்தை சேர்ந்த 50 வயது பெண், செந்தில்நகரை சேர்ந்த 5 வயது சிறுவன், பட்டுக்கோட்டையார் நகரை சேர்ந்த 29 வயது பெண், செந்தில் நகரை சேர்ந்த 38 வயது ஆண், பெரியாண்டிபாளையம் தனலட்சுமி நகரை சேர்ந்த 35 வயது பெண், குளத்துப்பாளையத்தை சேர்ந்த 52 வயது ஆண், புஷ்பாநகரை சேர்ந்த 39 வயது ஆண், கணபதிபாளையத்தை சேர்ந்த 3 வயது சிறுமி, சந்திராபுரத்தை சேர்ந்த 26 வயது ஆண், உடுமலையை சேர்ந்த 57 வயது ஆண், சின்னயகவுண்டன் தெருவை சேர்ந்த 67 வயது பெண், தாராபுரத்தை சேர்ந்த 20 வயது ஆண், உடுமலை லட்சுமி மில் ராமசாமி நகரை சேர்ந்த 70 வயது ஆண், 38 வயது பெண், உடுமலை அம்மன் கோவில் தெருவை சேர்ந்த 36 வயது பெண் ஆகிய 39 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் அனைவருக்கும் கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனை மற்றும் திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 737 ஆக உயர்ந்துள்ளது.
Related Tags :
Next Story