தமிழகத்தில் எல்லா மாவட்டங்களிலும் தினமும் கொரோனா பாதிப்பு புதிதாக 6,972 பேருக்கு தொற்று உறுதி
தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் தினந்தோறும் கொரோனா பாதிப்பு ஏற்படுகிறது. 27 மாவட்டங்களில் தொற்று ஆயிரத்தை தாண்டி உள்ளது.
சென்னை,
தமிழகத்தில் 59 ஆயிரத்து 584 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 4,233 ஆண்கள், 2,739 பெண்கள் என 6,972 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அனைத்து மாவட்டங்களிலும் புதிய தொற்று பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. 27 மாவட்டங்களில் பாதிப்பு எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டி உள்ளது.
நேற்றைய பாதிப்பில் அதிகபட்சமாக சென்னையில் 1,107 பேரும், விருதுநகரில் 577 பேரும், திருவள்ளூரில் 474 பேரும், குறைந்தபட்சமாக தர்மபுரியில் 8 பேரும், நீலகிரியில் 2 பேரும் இடம் பெற்றுள்ளனர். தமிழகத்தில் இதுவரை 23 லட்சத்து 83 ஆயிரத்து 664 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இதில் 2 லட்சத்து 27 ஆயிரத்து 268 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த பட்டியலில் 12 வயதுக்கு உட்பட்ட 11 ஆயிரத்து 379 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 28 ஆயிரத்து 294 முதியவர்களும் இடம் பெற்றுள்ளனர்.
88 பேர் உயிரிழப்பு
கொரோனாவுக்கு அரசு மருத்துவமனையில் 65 பேரும், தனியார் மருத்துவமனையில் 23 பேரும் என 88 பேர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தனர். இதில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட திருச்சியை சேர்ந்த 5 வயது சிறுமி காய்ச்சலுடன், சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் சிகிச்சைக்காக கடந்த 8-ந்தேதி அனுமதிக்கப்பட்டார். அந்த சிறுமிக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்தது. இந்தநிலையில் அந்த சிறுமி சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்தார்.
உயிரிழந்தவர்களில் சென்னையில் 24 பேரும், திருவள்ளூரில் 8 பேரும், தூத்துக்குடியில் 7 பேரும், செங்கல்பட்டு, மதுரை, காஞ்சீபுரம், விருதுநகரில் தலா 6 பேரும், திருவாரூரில் 4 பேரும், சிவகங்கையில் 3 பேரும், கோவை, சேலம், தஞ்சாவூர், தேனி, திருவண்ணாமலை தலா இருவரும், விழுப்புரம், திருச்சி, திருப்பூர், திருப்பத்தூர், கன்னியாகுமரி, கள்ளக்குறிச்சி, திண்டுக்கல், கடலூரில் தலா ஒருவரும் என 22 மாவட்டங்களில் உயிரிழப்பு நிகழ்ந்து உள்ளது. இதுவரையில் 3,659 பேர் உயிரிழந்துள்ளனர்.
பரிசோதனை நிறுவனங்கள்
கொரோனா பாதிப்பில் இருந்து 4 ஆயிரத்து 707 பேர் நேற்று குணம் அடைந்தனர். இதுவரையில் 1 லட்சத்து 66 ஆயிரத்து 956 பேர் குணம் அடைந்து உள்ளனர். சிகிச்சையில் 57 ஆயிரத்து 73 பேர் உள்ளனர்.
மேலும் புதிதாக 2 தனியார் நிறுவனத்துக்கு கொரோனா பரிசோதனை செய்ய அனுமதி வழக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்தம் 119 நிறுவனங்களில் பரிசோதனைகள் நடைபெறுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Tags :
Next Story