கோவை நஞ்சுண்டாபுரத்தில் 26 அடி உயர வேல் கட்-அவுட் போலீசார் அகற்றியதால் பரபரப்பு
கோவை நஞ்சுண்டாபுரத்தில் 26 அடி உயர வேல் கட்-அவுட் வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அதை போலீசார் அகற்றினர்.
கோவை,
கந்தசஷ்டி கவசத்தை அவதூறு செய்த கருப்பர் கூட்டத்தை கண்டித்து, இந்து அமைப்புகள் சார்பில் போராட்டங்கள் நடந்து வருகிறது.
அத்துடன் இந்து அமைப்பினர் தங்கள் வீடுகள் முன்பு முருககடவுளின் ஆயுதமான வேல் படத்தை வரையும் போராட்டத்தையும் நடத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் கோவை நஞ்சுண்டாபுரம் பஸ்நிறுத்தம் அருகே உள்ள மின்கம்பத்தில் இந்து அமைப்பு சார்பில் 26 அடி உயரத்தில் வேல் படம் வரைந்த கட்-அவுட் வைக்கப்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
போலீசார் அகற்றினர்
இது குறித்து தகவல் அறிந்த போத்தனூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் அவர்கள் அந்த வேல் படம் வரையப்பட்ட கட்-அவுட்டை அங்கிருந்து அகற்றி, அருகில் உள்ள கோவிலில் வைத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
5 பேர் கைது
மேலும் அங்கு பதற்றம் ஏற்படுவதை தடுக்க கூடுதல் போலீசாரும் பாதுகாப்புக் காக நிறுத்தப்பட்டனர். குனியமுத்தூர் பகுதியில் சாலையில் வேல் படத்தை வரைந்ததால் இந்து அமைப்பை சேர்ந்த 5 பேரை போலீசார் கைது செய்தனர். இதை கண்டித்து இந்து அமைப்பினர் நேற்று முன்தினம் குனியமுத்தூர் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். இது தொடர்பாக இந்து அமைப்புகளை சேர்ந்த 13 பேர் மீது தொற்று நோய் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story