மரக்கன்றுகள் நடும் விழா
திண்டிவனம் அரசு மருத்துவமனையில் பசுமை தாயகம் சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.
திண்டிவனம்,
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பிறந்த நாளையொட்டி, திண்டிவனம் அரசு மருத்துவமனையில் பசுமை தாயகம் சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.
இதற்கு பசுமை தாயகம் மாவட்ட செயலாளர் ராஜேஷ் தலைமை தாங்கினார். பா.ம.க மாவட்ட செயலாளர் சம்பத், மாநில துணைத் தலைவர்கள் கருணாநிதி, ஏழுமலை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் மருத்துவமனை வளாகத்தில் 81 மரக்கன்றுகள் நடப்பட்டது. தொடர்ந்து மருத்துவமனைக்கு வரும் புறநோயாளிகளுக்கு வழங்குவதற்காக முககவசங்களை அரசு தலைமை மருத்துவர் வளவனிடம் அவர்கள் வழங்கினர்.
இதில், மாநில துணைத்தலைவர் ராஜி, மாநில செயற்குழு உறுப்பினர் மலர்சேகர், பா.ம.க. நகர செயலாளர் பால்பாண்டியன் ரமேஷ் , பூதேரி ரவி, முன்னாள் நகரமன்ற உறுப்பினர் ஜெயராஜ், பழக்கடை மணி, நகர பசுமை தாயகம் இளைஞரணி மெக்கானிக் சுபாஷ், நகர பா.ம.க. இளைஞரணி ஜீவா, சிலம்பரசன், நாராயணன், சரவணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story