ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஆகஸ்டு மாதத்திற்குள் 8 ஆயிரம்பேர் கொரோனாவால் பாதிக்கப்படுவார்கள் - சிறப்பு அதிகாரி லட்சுமிபிரியா அதிர்ச்சி தகவல்


ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஆகஸ்டு மாதத்திற்குள் 8 ஆயிரம்பேர் கொரோனாவால் பாதிக்கப்படுவார்கள் - சிறப்பு அதிகாரி லட்சுமிபிரியா அதிர்ச்சி தகவல்
x
தினத்தந்தி 29 July 2020 8:43 AM GMT (Updated: 29 July 2020 8:43 AM GMT)

ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஆகஸ்டு மாதத்திற்குள் 8 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி லட்சுமி பிரியா அதிர்ச்சியான தகவலை தெரிவித் தார்.

ராணிப்பேட்டை,

இதுதொடர்பாக ராணிப் பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 4,107 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் நேற்று மட்டும் 200 பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பி உள்ளனர். ஜூலை மாதத்தில் மட்டும் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. அதற்காக பரிசோதனைகள் அதிகப்படுத்தி உள்ளோம். இந்த மாதத்தில் பரிசோதனைகள் இரட்டிப்பாக செய்யப் பட்டுள்ளது. இருந்தாலும் கொரோனா பாதிப்பு அதிகம் ஆகிறது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் பொது மக்கள் கொரோனா தொற்றின் பாதிப்பு தெரியாமல் முகக்கவசம் அணியாமல் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் அலட் சியமாக வெளியே சுற்றித்திரிகின்றனர். இதனால் மாவட்டத்தில் வைரஸ் தொற்று அதிகமாகிறது.

கடந்த வாரம் நெமிலியில் ஒரே நாளில் 102 பேர் பாதிக் கப்பட்டனர். இதுபோல் நூற்றுக்கும் மேற்பட்டோர் பாதிக்கப் பட்டதால் அவர் களை பஸ் மூலம் மருத்துவ மனைக்கு கொண்டு வரப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. கிராமப்புறங்களில் கிருமி நாசினி தெளிப்பதில்லை, சுகாதார பணிகள் நடப்பதில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். அது சம்பந்தமாக அதிகாரிகளிடம் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.

8 ஆயிரம் பேர் பாதிக்கப்படுவார்கள்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் வருகிற ஆகஸ்டு மாதத்திற்குள் 8 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு மாவட்ட நிர்வாகம் தயார் நிலையில் உள்ளது. மாவட்ட நிர்வாகம் கொரோனா தடுப்பு பணிகளை முறையாக செய்து வருகின்றது. ஆனால் இதற்கு பொதுமக்கள் முறையான ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.

சிறந்த முறையில் கொரோனா சிகிச்சை அளிக்க ஆற்காட்டில் உள்ள தனியார் கல்லூரியில் 150 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. இதேபோல் வாலாஜா அரசினர் கலைக்கல்லூரியில் இயற்கை மற்றும் யோகா முறையில் பயிற்சி அளிக்கப் பட்டு வருகிறது. இங்கு 310 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. கொரோனாவால் பாதிக்கப் பட்டவர்களுக்கு தரமான முறையில் குறிப்பிட்ட நேரத்தில் உணவுகள் வழங்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது கலெக்டர் திவ்யதர்ஷினி, மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயச்சந்திரன் ஆகியோர் உடன் இருந்தனர்.

ஆலோசனை கூட்டம்

முன்னதாக மாநில கண்காணிப்புக் குழு அதிகாரியும், கூடுதல் ஆணையருமான (வணிகவரி) லட்சுமி பிரியா, ராணிப் பேட்டை மாவட்ட கலெக்டர் திவ்யதர்ஷினி ஆகியோர் தலைமையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து ராணிப்பேட்டை மருத்துவ குழுவினருடன் ஆலோசனை நடைபெற்றது.

இதனையடுத்து விளாப் பாக்கம் பேரூராட்சிக்கு உட் பட்ட அரசு சுகாதார மருத்துவமனையையும், கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளையும் மற்றும் மகாலட்சுமி கல்லூரியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தும் விடுதிகளையும், சித்த மருத்துவ சிறப்பு மையம் அமைக் கப்பட்டுள்ள இடங்களையும் பார்வையிட்டனர்.

Next Story