மாவட்ட செய்திகள்

திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 382 பேருக்கு கொரோனா பாதிப்பு + "||" + In Tiruvallur district, corona affected 382 people in a single day

திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 382 பேருக்கு கொரோனா பாதிப்பு

திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 382 பேருக்கு கொரோனா பாதிப்பு
திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 382 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது.
திருவள்ளூர்,

திருவள்ளூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 7 பேர், கடம்பத்தூர் ஒன்றியத்தில் 16 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களுடன் திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று 382 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.


மாவட்டம் முழுவதும் இதுவரை 13 ஆயிரத்து 184 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 8,872 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 4,086 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று ஒரே நாளில் 4 பேர் பலியானதையடுத்து, இதுவரை பலியானவர்கள் எண்ணிக்கை 226 ஆனது.

வண்டலூர்

செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. நேற்று நந்திவரம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட நாராயணபுரம் பகுதியை சேர்ந்த 35 வயது ஆண், குளக்கரை பகுதியில் வசிக்கும் 9 வயது, 11 வயது சிறுமிகள், 8 வயது சிறுவன், கோவிந்தராஜபுரம் 5-வது தெருவை சேர்ந்த 27 வயது வாலிபர் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

வண்டலூர் மூகாம்பிகை கோவில் தெருவை சேர்ந்த 30 வயது ஆண் உள்பட 36 பேரும், மறைமலைநகர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட ரெயில் நகர் பகுதியில் வசிக்கும் 3 வாலிபர்கள், ராஜீவ்காந்தி நகரை சேர்ந்த 30 வயது வாலிபர், 65 வயது மூதாட்டி, 62 வயது முதியவர் 29 பேர், ஒத்திவாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட கிராம பகுதியில் 5 பேர் ஆகியோர் கொரோனவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இவர்களுடன் செங்கல்பட்டு மாவட்டத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு புதிய உச்சமாக நேற்று ஒரே நாளில் 540 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 13 ஆயிரத்து 841 ஆனது. இவர்களில் 9,900 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். நேற்று 3 பேர் உயிரிழந்தனர். இதனால் பலி எண்ணிக்கை 242 ஆக உயர்ந்தது. 3,699 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

படப்பை

காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை ஊராட்சி மற்றும் மணிமங்கலம் பகுதியை சேர்ந்த 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இவர்களுடன் காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று 373 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மாவட்டம் முழுவதும் இதுவரை 8,422 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 5,120 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.

3,196 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று ஒரே நாளில் 6 பேர் பலியானதால் சாவு எண்ணிக்கை 106 ஆக உயர்ந்தது.

தொடர்புடைய செய்திகள்

1. டெல்லிக்கு அடுத்தபடியாக தமிழகத்தில் அதிகம் பேர் கொரோனா தொற்றுக்கு குணமடைந்துள்ளனர்
டெல்லிக்கு அடுத்தபடியாக தமிழகத்தில் அதிகம் பேர் கொரோனா தொற்றுக்கு குணமடைந்துள்ளனர் என்று தமிழக சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறினார்.
2. கொரோனாவில் இருந்து விரைவாக விடுபட வேண்டும் என்றால், அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து போராட வேண்டும் - உலக சுகாதார அமைப்பு
கொரோனாவில் இருந்து விரைவாக விடுபட வேண்டும் என்றால், அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து போராட வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதனோம் தெரிவித்துள்ளார்.
3. செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 425 பேர் பாதிப்பு சாவு எண்ணிக்கை 302 ஆக உயர்வு
செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் நேற்று ஒரே நாளில் 425 பேர் பாதிக்கப்பட்டனர். 8 பேர் பலியானதால் சாவு எண்ணிக்கை 302 ஆக உயர்ந்தது.
4. கொரோனாவுக்கு முன்னாள் அமைச்சரின் மகன் உள்பட மேலும் 5 பேர் சாவு உயிரிழந்தோர் எண்ணிக்கை 80 ஆனது
புதுச்சேரியில் நேற்று ஒரே நாளில் புதிதாக 268 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சரின் மகன் உள்பட 5 பேர் கொரோனாவுக்கு பலியானார்கள். இதன்மூலம் உயிரிழந்தோர் எண்ணிக்கை 80 ஆனது.
5. உரம் வாங்க நீண்ட வரிசையில் காத்து கிடக்கும் விவசாயிகள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காததால் கொரோனா பரவும் அபாயம்
விவசாயத்துறை மந்திரியின் சொந்த மாவட்டமான ஹாவேரியில் உரம் வாங்க விவசாயிகள் நீண்ட வரிசையில் காத்து நின்றனர். அவர்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காததால் கொரோனா பரவும் அபாயம் உள்ளது.