மாவட்ட செய்திகள்

நெல்லை தச்சநல்லூரில் பரபரப்பு: வாலிபரை தாக்கிய 8 பேர் கைது தேவேந்திர குல வேளாளர் எழுச்சி இயக்கத்தினர் திடீர் உண்ணாவிரதம் + "||" + Nellai Dachanallur riots: 8 arrested for attacking Valiparai

நெல்லை தச்சநல்லூரில் பரபரப்பு: வாலிபரை தாக்கிய 8 பேர் கைது தேவேந்திர குல வேளாளர் எழுச்சி இயக்கத்தினர் திடீர் உண்ணாவிரதம்

நெல்லை தச்சநல்லூரில் பரபரப்பு: வாலிபரை தாக்கிய 8 பேர் கைது தேவேந்திர குல வேளாளர் எழுச்சி இயக்கத்தினர் திடீர் உண்ணாவிரதம்
நெல்லையில் வாலிபரை தாக்கியதாக 8 பேரை போலீசார் கைது செய்தனர். இதை கண்டித்து தேவேந்திர குல வேளாளர் எழுச்சி இயக்கத்தினர் திடீரென உண்ணாவிரதம் இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
நெல்லை,

நெல்லை மாவட்டம் அழகியபாண்டியபுரத்தை சேர்ந்தவர் தளவாய் (வயது 29). இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு தச்சநல்லூர் சத்திரம் புதுக்குளம் அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார். அப்போது அந்த பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். இதனால் தளவாய், சத்திரம் புதுக்குளத்தில் உள்ள தெருவுக்குள் புகுந்து மாற்று பாதையில் சென்றார்.


அப்போது அந்த பகுதியில் நின்று கொண்டு இருந்த 8 பேர், இந்த தெருவுக்குள் எப்படி வரலாம்? என்று கேட்டு தளவாயிடம் தகராறு செய்தனர். மேலும், அவர் மோட்டார் சைக்கிளில் ஒட்டி இருந்த படத்தை கிழித்துள்ளனர். சிலர் பாட்டிலால் தளவாயை அடித்து உதைத்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக தச்சநல்லூர் போலீஸ் நிலையத்தில் தளவாய் புகார் செய்தார்.

8 பேர் கைது

அதன்பேரில், நேற்று அதிகாலை நெல்லை டவுன் உதவி கமிஷனர் சதீஷ்குமார், இன்ஸ்பெக்டர் வனசுந்தர் மற்றும் 30-க்கும் மேற்பட்ட போலீசார் சந்திரம்புதுக்குளம் பகுதியை சுற்றி வளைத்தனர். இதை அறிந்த சிலர் தேவந்திரகுல வேளாளர் எழுச்சி இயக்க தலைவர் கண்ணபிரான் வீட்டுக்குள் புகுந்தனர். அங்கும் சென்று போலீசார் அவர்களை கைது செய்தனர்.

மற்ற வீடுகளில் இருந்தவர்களையும் கைது செய்தனர். இதில் அம்மு (23), பாஸ்கர் (32), அருண்குமார் (23), ராமேஷ்வரன் (23), சின்னதம்பி (24), கொம்பையா (23), மணிகண்டன் (31), அபினேஷ் (22) ஆகிய 8 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 10 அரிவாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கைதானவர்களை போலீசார் தச்சநல்லூர் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

திடீர் உண்ணாவிரதம்

போலீசார் திடீரென்று வீடு புகுந்து கைது செய்ததை கண்டித்து தேவேந்திர குல வேளாளர் எழுச்சி இயக்க தலைவர் கண்ணபிரான் தலைமையில், அவர் வீட்டின் முன்பு திடீரென உண்ணாவிரத போராட்டம் நடந்தது. இதில் சுற்று வட்டார பகுதியை சேர்ந்தவர்களும் பங்கேற்றனர். உண்ணாவிரதத்தின்போது அவர்கள் முக கவசம் அணிந்து இருந்தனர்.

அப்போது கண்ணபிரான் கூறுகையில், “போலீசார் திட்டமிட்டு நாடகம் ஆடுகிறார்கள். அந்த வாலிபர் எங்கள் பகுதிக்கு ஏன் வர வேண்டும்? போலீசார் திடீரென்று அத்துமீறி வீடு புகுந்து கைது செய்துள்ளனர். இதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். எங்கள் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவும் உடைக்கப்பட்டு உள்ளது. நான், கடையம் அருகே உள்ள ஆழ்வார்குறிச்சியை சேர்ந்த அணைக்கரை முத்துவின் வீட்டுக்கு போகலாம் என நினைத்து இருந்தேன். அதை தடுக்க இந்த நாடகம் ஆடினார்களா? என்று தெரியவில்லை. போலீசார் அராஜகத்தை கண்டித்தும், கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்யக்கூறியும் உண்ணாவிரதம் இருக்கிறோம். நீதி கிடைக்கும் வரை தொடர்ந்து போராடுவோம்“ என்றார்.

போலீஸ் கமிஷனர் அலுவலத்தில் மனு

இதற்கிடையே, கண்ணபிரானின் மனைவி பேச்சியம்மாள் தலைமையில், அந்த ஊர் பகுதி கிராம மக்கள், வக்கீல்கள் பாளையங்கோட்டையில் உள்ள நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். அவர்கள் போலீஸ் துணை கமிஷனர் சரவணனிடம் ஒரு புகார் மனு கொடுத்தனர்.

அந்த மனுவில், “இன்று (அதாவது நேற்று) அதிகாலை 30-க்கும் மேற்பட்ட போலீசார் எங்கள் பகுதிக்கு வந்தனர். அதில் சில போலீசார் எங்கள் வீட்டு கதவை உடைத்து உள்ளே வந்து எங்கள் இயக்க தொண்டர்களை தரக்குறைவாக பேசி கைது செய்தனர். சோதனை என்ற பெயரில் வீட்டில் இருந்த பொருட்களை சேதப்படுத்தி உள்ளனர். எங்கள் வீட்டுக்கு பாதுகாப்பாக வைத்து இருந்த கண்காணிப்பு கேமராவும் உடைக்கப்பட்டு உள்ளது. இயக்க தொண்டர்களை அடித்து உதைத்து துன்புறுத்தியது மனித உரிமை மீறலாகும். சம்பந்தப்பட்ட போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்“ என்று கூறப்பட்டு இருந்தது.

இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
நெல்லையில் வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
2. ஊரடங்கு காரணமாக வேலை இல்லாததால் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி வாலிபர் கைது
திருவேற்காடு அருகே ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட வாலிபர் கைது செய்யப்பட்டார்.
3. திருவேற்காடு அருகே ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி வாலிபர் கைது
திருவேற்காடு அருகே ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட வாலிபர் கைது செய்யப்பட்டார்.
4. மேற்கு வங்காளத்தில் மத்திய மந்திரியின் கார் மீது பயங்கர தாக்குதல்; திரிணாமுல் காங்கிரசார் மீது குற்றச்சாட்டு
மேற்கு வங்காளத்தில் வன்முறையில் பாதிக்கப்பட்ட பா.ஜனதாவினரை பார்க்க சென்ற மத்திய மந்திரி முரளீதரனின் வாகன அணிவகுப்பு மீது பயங்கர தாக்குதல் நடத்தப்பட்டது.
5. மம்தா பானர்ஜியை எதிர்த்து போட்டியிட்ட சுவேந்து அதிகாரியின் கார் மீது மர்ம நபர்கள் தாக்குதல்
மேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜியை எதிர்த்து போட்டியிட்ட சுவேந்து அதிகாரியின் கார் மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.