டாக்டர்- சுகாதார பணியாளர்களுக்கு கொரோனா: வாசுதேவநல்லூர் ஆரம்ப சுகாதார நிலையம் மூடல்


டாக்டர்- சுகாதார பணியாளர்களுக்கு கொரோனா: வாசுதேவநல்லூர் ஆரம்ப சுகாதார நிலையம் மூடல்
x
தினத்தந்தி 30 July 2020 5:24 AM IST (Updated: 30 July 2020 5:24 AM IST)
t-max-icont-min-icon

டாக்டர்- சுகாதார பணியாளர்களுக்கு கொரோனா: வாசுதேவநல்லூர் ஆரம்ப சுகாதார நிலையம் மூடல்.

வாசுதேவநல்லூர்,

வாசுதேவநல்லூரில் உள்ள மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரியும் டாக்டர் மற்றும் சுகாதார பணியாளர்களுக்கு கொரோனா தொற்று நேற்று முன்தினம் மாலையில் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து ஆஸ்பத்திரி நேற்று காலை மூடப்பட்டு நகரப்பஞ்சாயத்து தூய்மை பணியாளர்கள் மூலம் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. ஆஸ்பத்திரி 3 நாட்கள் அடைக்கப்பட்டிருக்கும் என சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர். மேலும் ஆஸ்பத்திரி மூடப்பட்டதால் அங்கு சென்று சிகிச்சை செய்த பொதுமக்கள் மிகுந்த அச்சத்துடன் உள்ளனர். தற்போது வாசுதேவநல்லூர் நகரப்பஞ்சாயத்து பகுதிகளில் கொரோனா அதிகமாக பரவி வருவதால் கடந்த ஒரு வாரமாக ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை செய்தவர்களுக்கு அவர்கள் இல்லம் சென்று கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் சுகாதார துறைக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

Next Story