மாவட்ட செய்திகள்

கொலைவழக்கில் 10 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த கணவன்-மனைவி கைது + "||" + Husband-wife arrested for 10 years in murder case

கொலைவழக்கில் 10 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த கணவன்-மனைவி கைது

கொலைவழக்கில் 10 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த கணவன்-மனைவி கைது
கொலைவழக்கில் கோர்ட்டில் ஆஜராகாமல் 10 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த கணவன்-மனைவியை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி,

தட்டார்மடம் அருகே உள்ள சவேரியார்புரத்தைச் சேர்ந்தவர் அந்தோணி சவரிமுத்து. இவருடைய மகள் சகாய லூர்து (வயது 21). கடந்த 2010-ம் ஆண்டு சகாய லூர்துவை கொலை செய்து விட்டு, அவர் அணிந்து இருந்த 4 பவுன் தங்க நகையை பறித்து சென்ற வழக்கில், மணியாச்சி பாறைக்குட்டத்தை சேர்ந்த தங்கபாண்டி மகன் முருகன் என்ற இசக்கிமுத்து(45), அவரது மனைவி பேச்சித்தாய்(40) ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்டனர்.


பின்னர் ஜாமீனில் வெளியே வந்த கணவன்-மனைவி இருவரும், கடந்த 2010-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் இருந்து கோர்ட்டில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்தனர். இதையடுத்து அவர்களை கைது செய்ய பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டு, கடந்த 10 ஆண்டுகளாக போலீசார் தேடி வந்தனர்.

கணவன்-மனைவி கைது

தலைமறைவான இசக்கிமுத்து, பேச்சித்தாய் ஆகிய 2 பேரையும் கைது செய்வதற்காக, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் உத்தரவின்பேரில், தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் பல்வேறு இடங்களில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர்.

இதையடுத்து விருதுநகர் மாவட்டம் நத்தம்பட்டியில் தங்கி இருந்த இசக்கிமுத்து, அவரது மனைவி பேச்சித்தாய் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. பூட்டிக் கிடக்கும் வீடுகளில் புகுந்து கைவரிசை: கொள்ளையனின் காதலி, கூட்டாளி கைது
பூட்டிக் கிடக்கும் வீடுகளில் புகுந்து நகை, பணம் கொள்ளையடித்த கொள்ளையனின் காதலி, கூட்டாளி கைது செய்யப்பட்டனர்.
2. தாயை அடித்து கொன்ற 2 மகன்கள் கைது
ஈரோட்டில் தாயை அடித்து கொன்ற 2 மகன்களை போலீசார் கைது செய்தனர்.
3. கோவில்பட்டியில் பெயிண்டர் கொலையில் 3 பேர் கைது
கோவில்பட்டியில் பெயிண்டர் கொலையில் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
4. கேரளாவில் 75 வயது மூதாட்டி பாலியல் வன்கொடுமை; திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன
கேரளாவில் 75 வயது மூதாட்டி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
5. கடற்கரையில் பிணமாக கிடந்தவர் வழிப்பறி கொள்ளையன்: சம்பந்தமே இல்லாமல் போலீசில் மாட்டிவிட்டதால் கொலை வாலிபர் கைது
திருவொற்றியூர் கடற்கரையில் பிணமாக கிடந்தவர் வழிப்பறி கொள்ளையன் என தெரிந்தது. சம்பந்தமே இல்லாமல் போலீசில் மாட்டிவிட்டதால் அவரை கொலை செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.