உடன்குடி யூனியன் அலுவலகத்தில் பணியாற்றும் பெண் ஊழியர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதால், யூனியன் அலுவலகம் மூடப்பட்டது.
உடன்குடி,
தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா பரவல் வேகமாக அதிகரித்து வருகிறது. உடன்குடி யூனியன் அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் அங்கு கணினி ஆபரேட்டரான 31 வயது பெண் ஊழியர் கொரோனாவால் பாதிக்கப்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து அவரை தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்து வருகின்றனர். தொடர்ந்து உடன்குடி யூனியன் அலுவலகத்தில் சுகாதார துறையினர் கிருமிநாசினி தெளித்தனர். பின்னர் யூனியன் அலுவலகம் தற்காலிகமாக மூடப்பட்டது.
இதேபோன்று உடன்குடி மேல பஜாரில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டார். தொடர்ந்து அந்த நிறுவனமும் மூடப்பட்டது. உடன்குடி பகுதியில் நகர பஞ்சாயத்து செயல் அலுவலர் பாபு தலைமையில், சுகாதார பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
ஆறுமுகநேரி
ஆறுமுகநேரியிலும் ஏராளமானவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆறுமுகநேரி காணியாளர் தெருவில் 2 ஆண்களும், திசைகாவல் வடக்கு தெருவில் ஒரு ஆணும் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து அப்பகுதிகளில் சுகாதார துறையினர் கிருமிநாசினி தெளித்தனர்.
சேலத்தில் பிளஸ்-2 மாணவி ஒருவருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்ட நிலையில் கோவை மாவட்டத்தில் மாணவர்களின் பாதுகாப்புக்கு எடுக்கப்படும் நடவடிக்கைகள் என்ன? என்பது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.