திருக்கோவிலூர் அருகே ஆசிரியை பயிற்சி முடித்த பெண்ணை 2-வது திருமணம் செய்த வாலிபர் தட்டிக்கேட்ட மனைவி மீது தாக்குதல்
திருக்கோவிலூர் அருகே ஆசிரியை பயிற்சி முடித்த பெண்ணை வாலிபர் ஒருவர் 2-வது திருமணம் செய்து கொண்டார். இதை தட்டிக்கேட்ட அவரது முதல் மனைவியை தாக்கி வீட்டை விட்டு விரட்டிவிட்டனர்.
திருக்கோவிலூர்,
திருக்கோவிலூர் அருகே உள்ள ரங்கப்பனூர் கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 35). ஐ.டி.ஐ. முடித்துள்ளார். இவருக்கும் மூங்கில்துறைப்பட்டை சேர்ந்த ஆதிலட்சுமி என்பவருக்கும் இடையே கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. ஆதிலட்சுமி வரகூரில் கிராம உதவியாளராக உள்ளார்.
இந்த நிலையில் சுரேஷ், அவரது சகோதரியும், தொட்டியத்தை சேர்ந்த செந்தில் என்பவரின் மனைவியுமான தமிழ்செல்வி (40) என்பவரின் தூண்டுதலின் பேரில் ஆதிலட்சுமியிடம் வரதட்சணை கேட்டு துன்புறுத்தி மிரட்டல் விடுத்துள்ளார்.
2-வது திருமணம்
மேலும் கடந்த ஜூன் மாதம் 10-ந்தேதி ஆசிரியர் பயிற்சி (பி.எட்.) படித்து முடித்த மகேஸ்வரி(25) என்பவரை 2-வதாக சுரேஷ் திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதற்கு சுரேஷின் அண்ணன் செல்வராஜ்(48), மற்றொரு அண்ணனான செந்திலின் மனைவி சந்திரா(32), உறவினரான எம்.சி.செந்தில்(45) ஆகியோர் உடந்தையாக இருந்துள்ளனர். இதுபற்றி ஆதிலட்சுமி கேட்ட போது அவரை அடித்து வீட்டை விட்டு துரத்திவிட்டனர்.
இதுகுறித்து ஆதிலட்சுமி திருக்கோவிலூர் அனைத்து மகளிர் போலீசில் அளித்த புகாரின் பேரில் சுரேஷ் உள்பட 6 பேர் மீது இன்ஸ்பெக்டர் சுமதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story