திருப்பூர் அரசு ஆஸ்பத்திரி நர்சு உள்பட 37 பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 795 ஆக உயர்வு


திருப்பூர் அரசு ஆஸ்பத்திரி நர்சு உள்பட 37 பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 795 ஆக உயர்வு
x
தினத்தந்தி 30 July 2020 6:04 AM GMT (Updated: 30 July 2020 6:04 AM GMT)

திருப்பூர் அரசு ஆஸ்பத்திரி நர்சு உள்பட 37 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 795 ஆக உயர்ந்துள்ளது.

திருப்பூர், 

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் புதிய உச்சத்தை அடைந்து வருகிறது. இது பொதுமக்கள் பலரிடம் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவில் தமிழகத்தில் தான் அதிகளவு பாதிப்பு இருந்து வருகிறது. நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது.

நேற்று மட்டும் தமிழகத்தில் 6 ஆயிரத்து 426 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு இருந்தது. அதன்படி திருப்பூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 37 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் மேல்சிகிச்சைக்காக கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனை மற்றும் திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

795 ஆக உயர்வு

அதன்படி திருப்பூர் கருவலூரை சேர்ந்த 32 வயது ஆண், கொங்கு மெயின்ரோட்டை சேர்ந்த 57 வயது ஆண், காங்கேயம் ரோட்டை சேர்ந்த 32 வயது ஆண், ஆலங்காட்டை சேர்ந்த 40 வயது ஆண், கல்லம்பாளையத்தை சேர்ந்த 30 வயது பெண், தென்னம்பாளையத்தை சேர்ந்த 45 வயது ஆண், இடுவம்பாளையத்தை சேர்ந்த 45 வயது ஆண், கமிஷனர் அலுவலகத்தை சேர்ந்த ஆயுதப்படை போலீஸ்காரரான 24 வயது ஆண், மாநகராட்சி சுகாதார மேற்பார்வையாளரான சூசையாபுரத்தை சேர்ந்த 49 வயது ஆண், வெங்கடேஷ்வராநகரை சேர்ந்த 23 வயது பெண், மங்கலம் ரோட்டை சேர்ந்த 40 வயது பெண், திருப்பூர் அரசு ஆஸ்பத்திரி 26 வயது நர்சு, முருகம்பாளையத்தை சேர்ந்த 22 வயது பெண், செட்டிபாளையத்தை சேர்ந்த 22 வயது பெண், முதலிபாளையத்தை சேர்ந்த 53 வயது பெண், தலக்கரையை சேர்ந்த 50 வயது பெண், தாராபுரத்தை சேர்ந்த 35 வயதுஆண், 1 வயது ஆண் குழந்தை.

தாராபுரம் நஸ்நகரை சேர்ந்த 54 வயது ஆண், பெரியகாட்டுப்பாளையத்தை சேர்ந்த 30 வயது ஆண், பொங்கலூரை சேர்ந்த 22 வயது ஆண், தெக்கலூரை சேர்ந்த 29 வயது பெண், மேட்டுப்பாளையம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய மருந்தாளுநரான 23 வயது கர்ப்பிணி, தேவம்பாளையத்தை சேர்ந்த 39 வயது பெண், 45 வயது ஆண், குடிமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ உதவியாளரான 40 வயது ஆண், கொண்டாம்பட்டியை சேர்ந்த 27 வயது ஆண், வள்ளிபாளையத்தை சேர்ந்த 62 வயது ஆண், ராக்கியாபாளையத்தை சேர்ந்த 48 வயது ஆண், கே.ஆர்.ஜி. லே அவுட்டை சேர்ந்த 58 வயது ஆண், தனிக்கரைநகரை சேர்ந்த 36 வயது ஆண், தென்னம்பாளையத்தை சேர்ந்த 35 வயது ஆண், செல்லப்பபுரத்தை சேர்ந்த 42 வயது ஆண், பாரப்பாளையத்தை சேர்ந்த 48 வயது ஆண், சின்னயகவுண்டன்பாளையத்தை சேர்ந்த 72 வயது ஆண், திருப்பூரை சேர்ந்த 67 வயது ஆண், மல்லம்பாளையத்தை சேர்ந்த 26 வயது ஆண் ஆகிய 37 பேருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 795 ஆக உயர்ந்துள்ளது.

Next Story