பெரம்பலூரில் தனியார் தொழிற்சாலை ஊழியர்கள் உள்பட 27 பேருக்கு கொரோனா அரியலூரில் 3 பேர் பாதிப்பு


பெரம்பலூரில் தனியார் தொழிற்சாலை ஊழியர்கள் உள்பட 27 பேருக்கு கொரோனா அரியலூரில் 3 பேர் பாதிப்பு
x
தினத்தந்தி 30 July 2020 6:18 AM GMT (Updated: 30 July 2020 6:18 AM GMT)

பெரம்பலூரில் தனியார் தொழிற்சாலை ஊழியர்கள் உள்பட 27 பேரும், அரியலூரில் 3 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பெரம்பலூர், 

பெரம்பலூர் மாவட்டத்தில் ஏற்கனவே கொரோனா வைரசால் 368 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். அதில் 5 பேர் உயிரிழந்தனர். 241 பேர் சிகிச்சை பெற்று மருத்துவமனைகளில் இருந்து வீடு திரும்பியுள்ளனர். இந்நிலையில் பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 27 பேர் கொரோனா வால் பாதிக்கப் பட்டுள்ளனர். விஜயகோபாலபுரத்தில் இயங்கும் தனியார் தொழிற்சாலையில் பணிபுரியும் பாடாலூர் தெற்கு தெருவை சேர்ந்த 30 வயது ஆண், துறைமங்கலத்தை சேர்ந்த 30 வயது பெண் மற்றும் 3 ஆண்கள் ஆகியோரும் கொரோனா வால் பாதிக்கப்பட்டுள் ளனர்.

இதே போல் அடைக்கம் பட்டியை சேர்ந்த 33 வயது ஆண், அல்லிநகரத்தை சேர்ந்த 31 வயது ஆண், பெரம்பலூர் நகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களான 30, 65 வயதுடைய பெண்கள், ஈச்சம்பட்டியை சேர்ந்த 38 வயது ஆண், பாடாலூரை சேர்ந்த 54 வயது ஆண், 1 வயது ஆண் குழந்தை, நூத்தப்பூர் மாதா கோவிலை சேர்ந்த 25 வயது ஆண், தொண்டமாந்துறையை சேர்ந்த 40 வயது ஆண் ஆகியோருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

395 ஆக உயர்வு

பெரம்பலூர் துறைமங் கலத்தை சேர்ந்தவரும், வாலிகண்டபுரம் மருத்துவ அலுவலருமான 27 வயது பெண், விவேகானந்தா தெருவை சேர்ந்த 16 வயது சிறுவன், கல்யாண் நகரை சேர்ந்த 85 வயது ஆண், பெரம்பலூர் அரசு மருத்துவமனை சி.டி.ஸ்கேன் தொழில்நுட்ப உதவியாளர் 34 வயது ஆண், முருகன் கோவில் தெருவை சேர்ந்த 55 வயதுடைய ஆண், அவரது 14, 18 வயதுடைய மகன்கள், எம்.வி.கே. நகரை சேர்ந்த 42 வயது ஆண், வெங்கடாஜலபதி நகரை சேர்ந்த 44 வயது ஆண், மேலமாத்தூர் சுகாதார ஆய்வாளர் 36 வயது ஆண், மேலப்பூலியூரை சேர்ந்த 40 வயது ஆண், தழுதாழையை சேர்ந்த 32 வயது ஆண், அன்னமங்கலத்தை சேர்ந்த 36 வயது ஆண் ஆகியோரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை 395 ஆக உயர்ந்துள்ளது.

இதே போல் அரியலூர் மாவட்டத்தில் நேற்ற 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அரியலூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதியில் 2 பேருக்கும், ஆண்டிமடம் ஒன்றிய பகுதியில் ஒருவருக்கும் என மொத்தம் 3 பேர் கொரோனாவால் பாதிக்கப் பட்டுள்ளனர். இதனால் அரியலூர் மாவட்டத்தில் கொரோனா வால் பாதிக்கப்பட்டவர் களின் எண்ணிக்கை 896 ஆக உயர்ந்துள்ளது.

Next Story