தொழிற்பயிற்சி மையங்களில் நாளை முதல் மாணவர் சேர்க்கை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்
தொழிற்பயிற்சி மையங்களில் நாளை முதல் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.
மும்பை,
மராட்டியத்தில் மொத்தம் 417 தொழிற்பயிற்சி மையங்கள் (ஐ.டி.ஐ.) உள்ளன. இந்த தொழிற்பயிற்சி மையங்களில் மொத்தம் 92 ஆயிரத்து 556 இடங்கள் உள்ளன. இந்தநிலையில் கொரோனா பரவல் காரணமாக இந்த ஆண்டு தொழிற்பயிற்சி மையங்களில் ஆன்லைன் மூலம் நாளை(சனிக்கிழமை) முதல் மாணவர் சேர்க்கை நடைபெறுவதாக மாநில திறன் மேம்பாட்டுத்துறை மந்திரி நவாப் மாலிக் தெரிவித்து உள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
இணைய தள முகவரி
https://admission.dvet.gov.in என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்ப படிவத்தை நிரப்பி மாணவர்கள் அனுப்பலாம். 10-ம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் அல்லது தோல்வியுற்றவர்கள் தொழிற்பயிற்சி மையங்களில் சேர தகுதியுடையவர்கள்.
இந்த குறைந்த அல்லது அதற்கு மேலான கல்வித்தகுதி மற்றும் 14 வயதுக்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். தொழிற்பயிற்சி மையங்கள் எப்போது மீண்டும் திறக்கப்படும் என்பது பற்றிய தகவல் கொரோனா நிலைமையை கருத்தில் கொண்டு பின்னர் தெரிவிக்கப்படும்.
இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

Related Tags :
Next Story