நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கு சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றப்படாது மந்திரி அனில் தேஷ்முக் தகவல்


நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கு சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றப்படாது மந்திரி அனில் தேஷ்முக் தகவல்
x
தினத்தந்தி 31 July 2020 3:39 AM IST (Updated: 31 July 2020 3:39 AM IST)
t-max-icont-min-icon

நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கு சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றப்படாது என உள்துறை மந்திரி அனில்தேஷ்முக் கூறியுள்ளார்.

மும்பை,

நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கு தொடர்பாக மும்பை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கு தொடர்பாக நடிகரின் காதலி நடிகை ரியா சக்ரபோர்த்தி, பிரபல இயக்குனர்கள் சஞ்சய் பன்சாலி, மகேஷ் பட் உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடத்தி உள்ளனர்.

இந்தநிலையில் நடிகர் சுஷாந்த் சிங்கை தற்கொலைக்கு தூண்டியதாக நடிகை ரியா சக்ரபோர்த்தி மீது பீகார் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். மேலும் அவர்கள் இது தொடா்பான விசாரணைக்கு மும்பை வந்து உள்ளனர்.

சி.பி.ஐ.க்கு மாறாது

இந்தநிலையில் பலர் சுஷாந்த் தற்கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து உள்ளனர். நடிகை ரியா சக்ரபோர்த்தியும் இந்த கோரிக்கையை வைத்து இருந்தார்.

இதில் சுஷாந்த் சிங் வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற முடியாது என மாநில உள்துறை மந்திரி அனில் தேஷ்முக் திட்டவட்டமாக கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘‘மும்பை போலீசார் அந்த வழக்கை திறம்பட விசாரணை நடத்தி வருகின்றனர். அது சி.பி.ஐ.க்கு மாற்றப்படாது’’ என்றார்.

Next Story