ஆரணியில் பிளஸ்-2 மாணவி தீக்குளித்து தற்கொலை
ஆரணியில் பிளஸ்-2 மாணவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
ஆரணி,
ஆரணி சைதாப்பேட்டை அனந்தபுரம் தெருவை சேர்ந்தவர் ஏழுமலை, கூலித்தொழிலாளி. அவருடைய மகள் வெண்ணிலா (வயது 18), பிளஸ்-2 படித்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று காலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வெண்ணிலா உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். தீ மளமளவென உடல் முழுவதும் பரவி கொழுந்துவிட்டு எரிந்தது.
இதனால் வலிதாங்காமல் அலறினார். அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆரணி அரசு மருத்துவமனையிலும், பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து ஆரணி நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுந்தர்ராஜன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பள்ளி மாணவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story