மாவட்ட செய்திகள்

பக்ரீத் பண்டிகையையொட்டி பிவண்டி, பால்கரில் பொதுமக்கள் கூட தடை + "||" + The public is also banned from Bhiwandi and Balkar on the occasion of Bakreed festival

பக்ரீத் பண்டிகையையொட்டி பிவண்டி, பால்கரில் பொதுமக்கள் கூட தடை

பக்ரீத் பண்டிகையையொட்டி பிவண்டி, பால்கரில் பொதுமக்கள் கூட தடை
பக்ரீத் பண்டிகையையொட்டி பிவண்டி, பால்கரில் பொதுமக்கள் கூட்டம் கூட தடைவிதிக்கப்பட்டுள்ளது.
மும்பை,

ஈகை திருநாளான பக்ரீத் பண்டிகை இன்று(சனிக்கிழமை) கொண்டாடப்படுகிறது. பக்ரீத் பண்டிகையையொட்டி இஸ்லாமியர்கள் மசூதிகள், மைதானங்கள் உள்ளிட்ட பகுதிகளில் கூட்டு தொழுகையில் ஈடுபடுவது வழக்கம்.

இந்தநிலையில் இந்த ஆண்டு கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் பால்கர், பிவண்டியில் பொதுமக்கள் கூட்டம் கூட தடைவிதிக்கப்பட்டுள்ளது.


வீட்டிலேயே கொண்டாட வேண்டும்

இது குறித்து பிவண்டி நிசாம்பூர் மாநகராட்சி கமிஷனர் பங்கஜ் ஆசியா வெளியிட்டுள்ள உத்தரவில், பொதுமக்கள் பக்ரீத்தை வீடுகளிலேயே குர்பானி கொடுத்து எளிமையாக கொண்டாடுமாறு கூறியுள்ளார். பால்கர் மாவட்ட கலெக்டர் கைலாஷ் ஷிண்டேவும் இதே உத்தரவை பிறப்பித்து உள்ளார். இதேபோல கல்யாண் டோம்பிவிலி மாநகராட்சி பெயில் பஜார் பகுதியில் ஆடு விற்பனைக்கு அனுமதி அளித்து இருந்தது. ஆனால் அங்கு பொதுமக்கள் சமூக இடைவெளியை பின்பற்றாததால் ஆடுகள் விற்பனை செய்ய வழங்கப்பட்ட அனுமதி திரும்ப பெறப்பட்டுள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. குலசேகரன்பட்டினம் அருகே, மண் அள்ள எதிர்ப்பு: பொக்லைன் எந்திரத்தை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம்
குலசேகரன்பட்டினம் அருகே மண் அள்ள எதிர்ப்பு தெரிவித்து, பொக்லைன் எந்திரத்தை பொதுமக்கள் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
2. சுடுகாட்டு நில ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில் பொதுமக்கள் முற்றுகை
சுடுகாட்டு நில ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில் பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
3. தடுப்பணை கட்ட மண் எடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து லாரியை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம்
திருவள்ளூர் அருகே புதிய தடுப்பணை கட்டும் பணி நடைபெற்று வரும் நிலையில், கட்டுமான பணிக்கு அப்பகுதியில் மண் எடுக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
4. கோவில்பட்டி நகரசபை அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
கோவில்பட்டி நகரசபை அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை.
5. விவசாய நிலத்தில் உயர் மின் அழுத்த கோபுரங்கள் அமைக்க எதிர்ப்பு கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் மனு
விவசாய நிலத்தில் உயர் மின் அழுத்த கோபுரங்கள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் கோரிக்கை மனு வழங்கினர்.