குடியாத்தம், அகரம்சேரி, சிப்காட்டில் நர்ஸ், போலீஸ் ஏட்டு உள்பட 77 பேருக்கு கொரோனா


குடியாத்தம், அகரம்சேரி, சிப்காட்டில் நர்ஸ், போலீஸ் ஏட்டு உள்பட 77 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 31 July 2020 10:30 PM GMT (Updated: 31 July 2020 11:35 PM GMT)

குடியாத்தம், அகரம்சேரி, சிப்காட்டில் 77 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

குடியாத்தம்,

குடியாத்தம் பாவோடும் தோப்பு, படவேட்டம்மன் தெரு, செட்டிகுப்பத்தில் தலா 2 பேர், புதுப்பேட்டையில் 3 பேர், பிச்சனூரில் 5 பேர், காமாட்சியம்மன்பேட்டை, புவனேஸ்வரிபேட்டை, பெரும்பாடியில் தலா 7 பேர் மற்றும் செதுக்கரை, மீனூர், ராஜாஜி தெரு, பஜனை கோவில் தெரு, வடக்கு பட்டரை, அசோக்நகர், இந்திராநகர், வா.ஊ.சி தெரு, சந்தப்பேட்டை, அம்மணாங் குப்பம், ஏரிபட்டறை, நெல்லூர் பேட்டை, மீனாட்சி அம்மன் நகர், எர்த்தாங்கல், கள்ளூர் திருநகர் ஆகிய பகுதிகளில் தலா ஒருவர் என மொத்தம் 50 பேர் நேற்று ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து அவர்கள் சிகிச்சைக்காக வேலூர் அரசு, தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். குடி யாத்தம் பகுதியில் இதுவரை 950-க்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில், 675-க்கும் மேற் பட்டோர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

அகரம்சேரி கிராமத்தை சேர்ந்த பெண் ஒருவர் வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் நர்சாக வேலைபார்த்து வருகிறார். இவருக்கு உடல் நிலை பாதிக் கப்பட்டதால் அதே மருத் துவமனையில் பரிசோதனை செய்யப் பட்டதில் அவருக்கு கொரோனா உறுதியானது. இதனைதொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவருடைய தந்தை, தாய், தம்பி 24, சகோதரி என 5 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டு குடியாத்தம் அரசு மருத்து வமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

இதேபோல் அகரம்சேரி மாளயாமேடு பகுதியைச் சேர்ந்த 25 வயது இளம்பெண் ணுக்கு கொரோனா தொற்று உறுதியானது. இவரும் வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் நர்சாக வேலை செய்து வருகிறார். அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சின்னச்சேரி கிராமத்தை சேர்ந்த 29 வயது ஆண், 13 வயது சிறுமிக்கும் தொற்று ஏற்பட்டு அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகின் றனர்.

ராணிப்பேட்டை, சிப்காட், அம்மூர் பகுதிகளில் நேற்று ஒரே நாளில் 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. பாதிக்கப்பட்ட அனைவரும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்கள் வசித்து வந்த வீடு, தெருக்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

மேல்பாடி போலீஸ் நிலைய ஏட்டுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து அவர் வேலூரில் உள்ள அரசு மருத் துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப் பட்டார். போலீஸ் நிலையம் முழுவதும் சுகாதாரத்துறை ஊழியர்கள் கிருமிநாசினி தெளித்தனர்.

Next Story