தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 2½ லட்சத்தை நெருங்கியது இதுவரையில் 25 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு பரிசோதனை


தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 2½ லட்சத்தை நெருங்கியது இதுவரையில் 25 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு பரிசோதனை
x
தினத்தந்தி 1 Aug 2020 12:12 AM GMT (Updated: 1 Aug 2020 12:12 AM GMT)

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 2½ லட்சத்தை நெருங்கியது. இதுவரையில் 25 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

சென்னை,

தமிழகத்தில் 58 ஆயிரத்து 350 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 3,492 ஆண்கள், 2,389 பெண்கள் என மொத்தம் 5,881 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

அதிகபட்சமாக சென்னையில் 1,013 பேரும், காஞ்சீபுரத்தில் 485 பேரும், திருவள்ளூரில் 373 பேரும், குறைந்தபட்சமாக அரியலூரில் 4 பேரும், தர்மபுரியில் 3 பேரும், நீலகிரியில் இருவரும் பாதிக்கப்பட்டு உள்ளனர். தமிழகத்தில் இதுவரை 25 லட்சத்து 60 ஆயிரத்து 269 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இதில் 2 லட்சத்து 45 ஆயிரத்து 859 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் 1 லட்சத்து 49 ஆயிரத்து 107 ஆண்களும், 96 ஆயிரத்து 725 பெண்களும், 3-ம் பாலினத்தவர் 27 பேரும் அடங்குவர். இந்த பட்டியலில் 12 வயதுக்கு உட்பட்ட 12 ஆயிரத்து 263 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 30 ஆயிரத்து 670 முதியவர்களும் இடம் பெற்றுள்ளனர்.

97 பேர் உயிரிழப்பு

கொரோனாவுக்கு அரசு மருத்துவமனையில் 68 பேரும், தனியார் மருத்துவமனையில் 29 பேரும் என 97 பேர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தனர். இதில் சென்னையில் 21 பேரும், திருவள்ளூரில் 10 பேரும், கன்னியாகுமரி, விருதுநகரில் தலா 6 பேரும், திருவண்ணாமலை, திருப்பத்தூர், தேனியில் தலா 5 பேரும், கோவை, திண்டுக்கல், மதுரை, தூத்துக்குடி, வேலூரில் தலா 4 பேரும், நெல்லையில் 3 பேரும், செங்கல்பட்டு, ராமநாதபுரம், கடலூர், ராணிப்பேட்டை, தஞ்சாவூரில் தலா இருவரும், சேலம், நாமக்கல், காஞ்சீபுரம், கள்ளக்குறிச்சி, தர்மபுரி, அரியலூரில் தலா ஒருவரும் என 24 மாவட்டங்களில் உயிரிழப்பு நிகழ்ந்து உள்ளது. இதுவரையில் 3,935 பேர் உயிரிழந்துள்ளனர்.

5,778 பேர் ‘டிஸ்சார்ஜ்’

கொரோனா பாதிப்பில் இருந்து 5 ஆயிரத்து 778 பேர் நேற்று குணம் அடைந்தனர். இதில் அதிகபட்சமாக சென்னையில் 1,026 பேரும், திருவள்ளூரில் 663 பேரும், செங்கல்பட்டில் 649 பேரும் அடங்குவர். இதுவரையில் 1 லட்சத்து 83 ஆயிரத்து 956 பேர் குணம் அடைந்து உள்ளனர். சிகிச்சையில் 57 ஆயிரத்து 968 பேர் உள்ளனர்.

தமிழகத்துக்கு வெளிநாடுகளில் இருந்து சிறப்பு விமானம் மூலம் வந்த 813 பேரும், வெளிமாநிலங்களில் இருந்து விமானம் மூலம் வந்த 576 பேரும், ரெயில் மூலம் வந்த 425 பேரும், சாலை மார்க்கமாக வந்த 3 ஆயிரத்து 607 பேரும், கடல் மார்க்கமாக வந்த 34 பேர் என மொத்தம் 5 ஆயிரத்து 455 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். தமிழகத்தில், வாலாஜாபாத்தில் உள்ள மாவட்ட பொது சுகாதாரத்துறை பரிசோதனை மையத்துக்கு கொரோனா பரிசோதனை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் 59 அரசு மற்றும் 61 நிறுவனங்கள் என பரிசோதனை மையங்களில் எண்ணிக்கை 120 ஆக அதிகரித்து உள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story