மாவட்ட செய்திகள்

தென்காசியில் ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் + "||" + Rural development workers protest in Tenkasi

தென்காசியில் ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

தென்காசியில் ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
தென்காசியில் ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்.
தென்காசி,

கொரோனா பரவலை கருத்தில் கொள்ளாமல் ஊரக வளர்ச்சித்துறையில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்ட பணிகளை விரைந்து முடிக்க நிர்பந்திப்பதை கைவிட வேண்டும். பழிவாங்கும் நோக்கத்தோடு பிறப்பிக்கப்பட்ட கோவை மாவட்டத்தில் 4 ஊழியர்களின் மாவட்ட மாறுதல்களை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்பன உள்பட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தென்காசி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கருப்பு பட்டை அணிந்து நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்க மாவட்ட துணைத் தலைவர் ராஜசேகரன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் ஜெயராமன், இணைச் செயலாளர் கோபி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கொரோனா தொற்றால் உயிரிழந்த ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்களுக்கு ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. மாவட்ட செயலாளர் சுப்பிரமணியன் கோரிக்கைகளை விளக்கி பேசினார்.


நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் சங்க கோட்ட தலைவர் முகம்மது முஸ்தபா, தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாநில சட்ட செயலாளர் பிச்சைக்கனி, ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் பழனி, வருவாய்த்துறை அலுவலர் சங்க மாவட்ட துணைத் தலைவர் திருமலை முருகன், தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி தென்காசி வட்டார செயலாளர் ராஜ்குமார், தமிழ்நாடு மருந்தாளுநர் சங்க மாநில தலைவர் சுப்பிரமணியன், பொது சுகாதாரத்துறை அலுவலர் சங்க மாநில தலைவர் கங்காதரன், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் துரைசிங் ஆகியோர் பேசினர். ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க மாநில துணை தலைவர் சண்முகசுந்தரம் நிறைவுரையாற்றினார். பொருளாளர் மாணிக்கவாசகம் நன்றி கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. 12 மணி நேர வேலை உத்தரவை ரத்து செய்யக்கோரி 8 மையங்களில் தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்
12 மணி நேர வேலை உத்தரவை ரத்து செய்யக்கோரி தொழிற்சங்கங்கள் சார்பில் 8 மையங்களில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
2. நெல்லை, தென்காசி மாவட்டங்களில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டம்
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
3. நெல்லையில் தூய்மை பணியாளர்கள் 11 இடங்களில் ஆர்ப்பாட்டம்
நெல்லையில் தூய்மை பணியாளர்கள் 11 இடங்களில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
4. காயல்பட்டினத்தில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டம்
காயல்பட்டினம் வள்ளல் சீதக்காதி திடலில் எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
5. வேலூரில் டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
வேலூர் மாவட்ட டாஸ்மாக் ஊழியர்கள் சங்கம் (சி.ஐ.டி.யு.) சார்பில் 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலூர் கோட்ட டாஸ்மாக் மேலாளர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.