மாவட்ட செய்திகள்

பக்ரீத் பண்டிகை: வீடுகளில் தொழுகை நடத்திய முஸ்லிம்கள் + "||" + Bakreed festival Conducted prayers in homes Muslims

பக்ரீத் பண்டிகை: வீடுகளில் தொழுகை நடத்திய முஸ்லிம்கள்

பக்ரீத் பண்டிகை: வீடுகளில் தொழுகை நடத்திய முஸ்லிம்கள்
பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, முஸ்லிம்கள் தங்களது வீடுகளிலேயே தொழுகை நடத்தினர்.
ஆறுமுகநேரி,

பக்ரீத் பண்டிகை நேற்று கொண்டாடப்பட்டது. இந்த நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமலில் உள்ளதால், முஸ்லிம்கள் பள்ளிவாசல்கள், மைதானங்கள், கடற்கரை உள்ளிட்ட இடங்களில் தொழுகை நடத்த அனுமதிக்கப்படவில்லை.


இதையொட்டி காயல்பட்டினத்தில் முஸ்லிம்கள் தங்களது வீடுகளிலேயே சிறப்பு தொழுகை நடத்தினர். பெரும்பாலானவர்கள் முககவசம் அணிந்தும், சமூக இடைவெளியை கடைபிடித்தும் தொழுகையில் பங்கேற்றனர். பின்னர் ஏழைகளுக்கு இறைச்சி, அரிசி போன்றவற்றை வழங்கினர்.

இதேபோன்று தூத்துக்குடி, உடன்குடி, கேம்பலாபாத், ஆறாம்பண்ணை, செய்துங்கநல்லூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் முஸ்லிம்கள் தங்களது வீடுகளிலேயே பக்ரீத் பண்டிகை சிறப்பு தொழுகை நடத்தினர்.

தொழுகை முடிந்ததும், ஒருவருக்கு ஒருவர் பக்ரீத் பண்டிகை வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டனர். பின்னர் ஏழைகளுக்கு உதவிகளை வழங்கினர்.

தொடர்புடைய செய்திகள்

1. பக்ரீத் பண்டிகை சமூக இடைவெளியை கடைப்பிடித்து முஸ்லிம்கள் சிறப்புத்தொழுகை
புதுச்சேரியில் நேற்று பக்ரீத் பண்டிகையையொட்டி சமூக இடை வெளியை கடைப்பிடித்து முஸ்லிம்கள் சிறப்புத் தொழுகை நடத்தினர்.
2. பக்ரீத் பண்டிகை: டெல்லி ஜும்மா மசூதியில் இஸ்லாமியர்கள் சிறப்புத் தொழுகை
பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு டெல்லி ஜும்மா மசூதியில் சமூக இடைவெளியுடன் இஸ்லாமியர்கள் சிறப்புத்தொழுகை நடத்தினர்.
3. இன்று பக்ரீத் பண்டிகைகவர்னர், அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து
பக்ரீத் பண்டிகையையொட்டி கவர்னர், முதல்-அமைச்சர் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.