தானே மான்பாடாவில் லாரியில் இருந்த ரூ.1.38 கோடி கஞ்சா பறிமுதல் போலீஸ் விசாரணை


தானே மான்பாடாவில் லாரியில் இருந்த ரூ.1.38 கோடி கஞ்சா பறிமுதல் போலீஸ் விசாரணை
x
தினத்தந்தி 2 Aug 2020 12:28 AM GMT (Updated: 2 Aug 2020 12:28 AM GMT)

தானே மான்பாடாவில் லாரியில் இருந்த ரூ.1 கோடியே 38 லட்சம் மதிப்புள்ள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

தானே,

தானே மான்பாடா அருகே லாரியில் போதைப்பொருள் கடத்தப்படுவதாக போதைதடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் போலீசார் அப்பகுதியில் தீவிரமாக கண்காணித்து வந்தனர். அதிகாலை 4 மணி அளவில் அங்கு வெகுநேரமாக லாரி ஒன்று நின்று கொண்டிருந்ததை கண்ட போலீசார் அங்கு சென்றனர்.

லாரி மீது போடப்பட்டு இருந்த பிளாஸ்டிக் விரிப்பை பிரித்து சோதனையிட்டனர்.

இதில் லாரியில் மக்காச்சோளம் நிரப்பி வைக்கப்பட்டு இருந்தது. மேலும் அதன் அடியில் பண்டல், பண்டலாக சிறிய மூட்டைகள் மறைத்து வைக்கப்பட்டு இருந்தது. இவற்றை வெளியே எடுத்து பிரித்து பார்த்த போது கஞ்சா இருந்தது தெரியவந்தது.

லாரியில் இருந்த கஞ்சாவின் மொத்த எடை 691 கிலோ ஆகும். இதன் மதிப்பு ரூ.1 கோடியே 38 லட்சம் என தெரிகிறது. இதையடுத்து லாரியையும், அதில் இருந்த கஞ்சாவையும் போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் லாரியில் யாரும் இல்லாததால் இதனை கடத்தி வந்தவர்கள் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story