மாவட்ட செய்திகள்

கொரோனா விலக வேண்டி மூலஸ்த்தம்மன் கோவிலில் ஆடி திருவிழா - சமூக இடைவெளியுடன் கிராம மக்கள் சாமி தரிசனம் + "||" + Corona had to leave Audi Festival at Moolasthamman Temple

கொரோனா விலக வேண்டி மூலஸ்த்தம்மன் கோவிலில் ஆடி திருவிழா - சமூக இடைவெளியுடன் கிராம மக்கள் சாமி தரிசனம்

கொரோனா விலக வேண்டி மூலஸ்த்தம்மன் கோவிலில் ஆடி திருவிழா - சமூக இடைவெளியுடன் கிராம மக்கள் சாமி தரிசனம்
கொரோனா விலக வேண்டி முத்தியால்பேட்டை மூலஸ்த்தம்மன் கோவிலில் ஆடி திருவிழா நடந்தது. இதில் கிராம மக்கள் சமூக இடைவெளியுடன் சாமி தரிசனம் சேய்தனர்.
காஞ்சீபுரம்,

காஞ்சீபுரத்தை அடுத்த முத்தியால்பேட்டையில் புகழ்பெற்ற மூலஸ்த்தம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆடி திருவிழா காஞ்சீபுரம் மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞரணி செயலாளர் ஆர்.வி.ரஞ்சித்குமார், ஏற்பாட்டின் பேரில் நடைபெற்றது.


விழாவையொட்டி அம்மனுக்கு கூழ்வார்த்தல், அம்மன் திருவீதி உலா நடைபெற்றது. முன்னதாக மூலஸ்த்தம்மனுக்கு மஞ்சள், சந்தனம், குங்குமம், பன்னீர், பால், தயிர் மற்றும் நறுமண பொருட்கள் கொண்டு அபிஷேகம் நடைபெற்றது. வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட அம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். கொரோனா விலக வேண்டி அர்்ச்சகர்கள் விசேஷ மந்திரங் கள் ஓதி பூஜைகள் நடத்தினர்.

இதல் கிராம மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு சமூக இடைவெளியை பின்பற்றி சாமி தரிசனம் செய்தனர். விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் முக கவசம், கபசுர குடிநீர், கிருமிநாசினி போன்றவற்றை ஆர்.வி.ரஞ்சித்குமார் வழங்கினார்.

மேலும் அவர், முன்னாள் எம்.பி. மைத்ரேயன் முன்னிலையில் ஏழை குடும்பத்துக்கு கோ தானம் வழங்கினார்.

நிகழ்ச்சியில் காஞ்சீபுரம் மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வி.சோமசுந்தரம், மாவட்ட அ.தி.மு.க. அவைத்தலைவர் குண்ணவாக்கம் .கிருஷ்ணமூர்த்தி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஆர்.வி.ஜோதியம்மாள், பிரேமா ரஞ்சித்குமார், உள்பட பலர் கலந்து கொண்டனர்.