திருப்பூர் மாவட்டத்தில், மேலும் 36 பேருக்கு கொரோனா - பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 909 ஆக அதிகரிப்பு


திருப்பூர் மாவட்டத்தில், மேலும் 36 பேருக்கு கொரோனா - பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 909 ஆக அதிகரிப்பு
x
தினத்தந்தி 2 Aug 2020 6:15 AM GMT (Updated: 2 Aug 2020 5:56 AM GMT)

திருப்பூர் மாவட்டத்தில் மேலும் 36 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 909 ஆக அதிகரித்துள்ளது.

திருப்பூர், 

தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு தீவிரப்படுத்தி வருகிறது. 7-வது கட்ட ஊரடங்கு வருகிற 31-ந் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் நேற்று 36 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.

அதன்படி திருப்பூர் மாவட்டம் தாராபுரம் புதிய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்த 68 வயது ஆண், என்.ஏ.எஸ். நகரை சேர்ந்த 38 வயது ஆண், 20 வயது ஆண், பள்ளிவாசல் வீதியை சேர்ந்த 38 வயது பெண், பீகார் மாநிலத்தை சேர்ந்த 22 வயது வாலிபர், திருப்பூர் கூட்டுறவு நகரை சேர்ந்த 26 வயது ஆண், சூசையாபுரத்தை சேர்ந்த 68 வயது பெண், கருவலூரை சேர்ந்த 24 வயது பெண், திருப்பூர் கொங்குநகரை சேர்ந்த 54 வயது ஆண், பெரியகாட்டுப்பாளையத்தை சேர்ந்த 46 வயது பெண், கட்டபொம்மன் நகரை சேர்ந்த 67 வயது ஆண், வ.உ.சி.நகரை சேர்ந்த 25 வயது பெண், திருப்பூர் காங்கேயம் ரோடு செந்தில்நகரை சேர்ந்த 32 வயது ஆண், 25 வயது பெண், டி.எஸ்.கே. கதிர் நகரை சேந்த 25 வயது பெண், ஆண்டிப்பாளையத்தை சேர்ந்த 26 வயது ஆண், மிஷன் வீதியை சேர்ந்த 34 வயது பெண், குமார் நகரை சேர்ந்த 45 வயது ஆண், பாரப்பாளையம் அய்யன்நகரை சேர்ந்த 33 வயது ஆண் ஆகியோருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுபோல் கே.செட்டிப்பாளையம் வசந்தம் நகரை சேர்ந்த 30 வயது ஆண், திரு.வி.க.நகரை சேர்ந்த 48 வயது பெண், திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையை சேர்ந்த 31 வயது ஆண் டாக்டர், திருப்பூர் மகாலட்சுமி அப்பார்ட்மெண்ட்டை சேர்ந்த 31 வயது பெண், 5 வயது சிறுவன், கிருஷ்ணாநகரை சேர்ந்த 47 வயது ஆண், வெள்ளியங்காடு டி.எஸ்.கே. நகரை சேர்ந்த 27 வயது பெண், உடுமலை எலையமுத்தூர் கிழவன் காட்டூரை சேர்ந்த 61 வயது ஆண், திருப்பூர் செல்லப்பபுரத்தை சேர்ந்த 63 வயது ஆண், தாராபுரம் சின்னிய கவுண்டர் வலசு பகுதியை சேர்ந்த 59 வயது ஆண் ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

திருமுருகன்பூண்டியை சேர்ந்த 69 வயது ஆண், தாராபுரம் ராஜேந்திரா நகரை சேர்ந்த 27 வயது ஆண், திருப்பூர் காந்திநகர் வி.பி.லேஅவுட்டை சேர்ந்த 34 வயது ஆண், மண்ணரை பொன்னுசாமி நகரை சேர்ந்த 49 வயது ஆண், உடுமலை ஜல்லிப்பட்டியை சேர்ந்த 34 வயது ஆண், 33 வயது ஆண், 40 வயது ஆண் ஆகியோருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவர்கள் அனைவரும் மேல்சிகிச்சைக்கு கோவை, திருப்பூர், உடுமலை, தாராபுரம் அரசு ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மாவட்டத்தில் தற்போது கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 909 ஆக உயர்ந்துள்ளது.

Next Story