அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணி நாளை தொடக்கம்: நெல்லை தாமிரபரணி ஆற்றில் புனித மண் எடுத்து அனுப்பப்பட்டது
அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணி நாளை தொடங்கப்பட உள்ளதையொட்டி, கட்டுமானத்துக்கு நெல்லை குறுக்குத்துறை தாமிரபரணி ஆற்றில் இருந்து புனித மண் எடுத்து அனுப்பி வைக்கப்பட்டது.
நெல்லை,
உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமான பணியை நாளை (புதன்கிழமை) பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். இதைத்தொடர்ந்து கட்டுமான பணிகள் வேகமாக நடைபெற உள்ளது.
இந்த பணிக்கு நாடு முழுவதும் பல்வேறு புண்ணிய தலங்களில் இருந்து புனித நீர் மற்றும் மண் எடுத்து அனுப்பி வருகிறார்கள். மேலும் கட்டுமானத்துக்கு தேவையான பொருட்களையும் அனுப்பி வைக்கின்றனர்.
இதையொட்டி விசுவ இந்து பரிஷத் சார்பில் நெல்லை குறுக்குத்துறை தாமிரபரணி ஆற்றில் இருந்து புனித மண் எடுத்து அனுப்பும் பணி நேற்று காலை நடைபெற்றது. தாமிரபரணி ஆற்றில் குறுக்குத்துறை தீர்த்தக்கட்டத்தில் ராமர் படம் வைத்து விளக்கு ஏற்றி சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.
பின்னர் தாமிரபரணி ஆற்றில் இருந்து புனித மண் எடுக்கப்பட்டது. அந்த மண்ணை ஒரு பையில் வைத்து கட்டப்பட்டு, பூஜை செய்யப்பட்டது. அப்போது ராம நாம பக்தி கோஷங்கள் எழுப்பினார்கள். பின்னர் குறுக்குத்துறை முருகன் கோவிலை சுற்றி வந்து, அயோத்திக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த நிகழ்ச்சியில், துறவியல் பேரவை சிவானந்தமய்யா சுவாமி, ஆர்.எஸ்.எஸ். மாநில பொறுப்பாளர்கள் நல்லகண்ணு, வெங்கட்ராமன், விசுவ இந்து பரிஷத் மாநில பொறுப்பாளர்கள் செல்லபாண்டியன், பன்னீர்செல்வம், மாவட்ட தலைவர் முத்துக்குமார், இணை செயலாளர் பாலவிக்னேஷ், மாவட்ட சத்சங்க அமைப்பாளர் அசோக், பஜ்ரங்தள அமைப்பாளர் முத்துராஜ், பாரதீய ஜனதா கட்சி மாவட்ட தலைவர் மகாராஜன், இந்து முன்னணி பிரம்மநாயகம் மற்றும் பல்வேறு இந்து அமைப்பினர், ராம பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story