பாலத்தின் தடுப்பு சுவரை உடைத்து கொண்டு கழிமுகத்தில் பாய்ந்த கன்டெய்னா்; லாரி டிரைவர் உயிர் தப்பினார்
தானேயில் பாலத்தின் தடுப்பு சுவரை உடைத்து கொண்டு கன்டெய்னர் லாரி கழிமுகத்தில் பாய்ந்த விபத்தில் டிரைவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
மும்பை,
தானே மாவட்டம் பிவண்டி பகுதியில் இருந்து நேற்று அதிகாலை நவிமும்பையில் உள்ள ஜவகர்லால் நேரு துறைமுகத்துக்கு கன்டெய்னர் லாரி ஒன்று புறப்பட்டு சென்றது. லாரியில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்காக மருந்து பொருட்கள் இருந்தன. இந்த லாரி காலை 5.45 மணிக்கு காஷெலி பகுதியில் உள்ள ரெட்டிபந்தர் கழிமுக பாலத்தில் சென்று கொண்டு இருந்தபோது, திடீரென லாரியின் டயர்கள் சருக்கின.
இதனால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி பாலத்தின் தடுப்பு சுவரை உடைத்துக்கொண்டு கழிமுகத்திற்குள் பாய்ந்தது.
இதுபற்றி தகவல் அறிந்து தானே தீயணைப்பு படையினர், போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அவர்கள் லாரி டிரைவர் ரமேஷ் பாண்டேயை (வயது45) பத்திரமாக மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்த னர். மேலும் கன்டெய்னர் லாரியை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கடல் அலை சீற்றம் காரணமாக லாரியை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தீயணைப்பு துறையினர் கூறியுள்ளனர்.
கழிமுகத்தில் கன்டெய் னர் லாரி பாய்ந்த சம்பவத்தால் நேற்று ரெட்டிபந்தர் பாலத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Tags :
Next Story