மும்பை போலீசாருக்கு உடல்நலனை கண்காணிக்கும் கருவி - நடிகர் அக்ஷய்குமார் வழங்கினார்


மும்பை போலீசாருக்கு உடல்நலனை கண்காணிக்கும் கருவி - நடிகர் அக்ஷய்குமார் வழங்கினார்
x
தினத்தந்தி 4 Aug 2020 5:30 AM IST (Updated: 4 Aug 2020 2:32 AM IST)
t-max-icont-min-icon

மும்பை போலீஸ் கமிஷனர் பரம்பீர் சிங்கிடம் நடிகர் அக் ஷய்குமார் உடல்நலனை கண்காணிக்கும் கருவியை வழங்கினார்.

மும்பை,

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ நடிகர் அக் ஷய்குமார் பிரதமர் நிவாரண நிதிக்கு ரூ.25 கோடி அளித்து இருந்தாா். இவர் மேலும் மும்பை போலீசாருக்கு முககவசம், சானிடைசர் போன்ற பொருட்களையும் வழங்கி உள்ளார். இந்தநிலையில் அவர் மும்பை போலீசாருக்கு உடல்நலத்தை கண்காணிக்கும் கருவியை வழங்கி உள்ளார். இந்த தகவலை சுற்றுச்சூழல் துறை மந்திரி ஆதித்ய தாக்கரே டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

அக் ஷய்குமார் உடல்நலன்- ஆரோக்கியத்தை கண்காணிக்கும் கருவியை மும்பை போலீசாரிடம் ஒப்படைத்தார். இந்த கருவி கொரோனாவுக்கு எதிராக போராடி வரும் போலீசாரின் உடல் ஆக்சிஜன் அளவு, வெப்பநிலை, இதய துடிப்பு போன்றவற்றை கண்காணிக்கும். இதே கருவியை அக் ஷய்குமார் கடந்த மாதம் நாசிக் போலீசாருக்கு வழங்கினார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதேபோல அவர் மற்றொரு டுவிட்டில் போலீசாருக்கு உதவிய நடிகா் அக்சய்குமாருக்கு நன்றி தெரிவித்து உள்ளார். 

Next Story