சம்பளம் வழங்காததை கண்டித்து நகராட்சி ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம்


சம்பளம் வழங்காததை கண்டித்து நகராட்சி ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம்
x
தினத்தந்தி 4 Aug 2020 4:15 AM IST (Updated: 4 Aug 2020 3:49 AM IST)
t-max-icont-min-icon

சம்பளம் வழங்காததை கண்டித்து நகராட்சி ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுச்சேரி,

கொரோனா தொற்று பரவாமல் தடுக்க நகராட்சி ஊழியர்கள் கிருமி நாசினி தெளிப்பது, தொற்று பாதிக்கப்பட்ட பகுதிகளை சுத்தம் செய்வது, இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்வது ஆகிய பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு கடந்த 2 மாதத்திற்கான சம்பளம் மற்றும் ஓய்வூதியம் வழங்கப்படவில்லை.

இதனை கண்டித்து புதுச்சேரி நகராட்சி அலுகலகம் அமைந்துள்ள கம்பன் கலையரங்கத்தில் ஊழியர்கள் நேற்று உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்துக்கு புதுச்சேரி நகராட்சி ஊழியர்கள் கூட்டுப்போராட்ட குழு தலைவர் விநாயகவேல் தலைமை தாங்கினார். ஒருங்கிணைப்பாளர் ஆனந்த கணபதி முன்னிலை வகித்தார்.

ஓய்வுபெற்ற ஊழியர் சங்க தலைவர் உதயகுமார் மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள் தேவதாஸ், கலியபெருமாள், வேளாங்கண்ணி, தாசன், அய்யப்பன், ராஜேந்திரன் உள்பட பலர் கலந்துகொண்டனர். இதேபோல் உழவர்கரை நகராட்சியிலும் ஊழியர்கள் உள்ளிருப்பு வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். நகராட்சி அலுவலகத்தில் பணிகள் எதுவும் மேற்கொள்ளாமல் ஒட்டுமொத்தமாக அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Next Story