மாவட்ட செய்திகள்

திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 332 பேருக்கு கொரோனா பாதிப்பு + "||" + Corona affected 332 people in a single day in Tiruvallur district

திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 332 பேருக்கு கொரோனா பாதிப்பு

திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 332 பேருக்கு கொரோனா பாதிப்பு
திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 332 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதையடுத்து மாவட்டம் முழுவதும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 15 ஆயிரத்தை நெருங்குகிறது.
திருவள்ளூர்,

திருவள்ளூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 22 பேர், கடம்பத்தூர் ஒன்றியத்தில் 29 பேர் உள்பட திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் நேற்று ஒரே நாளில் 332 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

மாவட்டம் முழுவதும் இதுவரை 14 ஆயிரத்து 750 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களில் 11 ஆயிரத்து 83 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். 3,409 பேர் ஆஸ்பத்திரியில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.


நேற்று ஒரே நாளில் 4 பேர் பலியாயினர். இதனால் இதுவரை பலியானோர் எண்ணிக்கை 258 ஆக உயர்ந்தது.

செங்கல்பட்டு மாவட்டம் ஒத்திவாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட கொளப்பாக்கம் சபாபதி நகர், நேரு தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் வசிக்கும் ஒரே குடும்பத்தை சேர்ந்த 29, 32 மற்றும் 35 வயது வாலிபர்கள் உள்பட 6 பேர், மறைமலைநகர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் ஒரே குடும்பதை சேர்ந்த 30 வயது இளம்பெண், 31 வயது வாலிபர் உள்பட 11 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.

நந்திவரம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட மண்ணிவாக்கம் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் 7 வயது சிறுமி, 67 வயது மூதாட்டி, 32 வயது வாலிபர், 51 வயது ஆண் உள்பட 15 பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களுடன் செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 331 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 15 ஆயிரத்து 657 ஆக உயர்ந்து உள்ளது. இவர்களில் 12 ஆயிரத்து 676 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். நேற்று ஒரே நாளில் 4 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 262 ஆக உயர்ந்தது. 2,719 பேர் தொடர்ந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை ஊராட்சி பகுதிக்கு உட்பட்ட ஆத்தனஞ்சேரி பகுதியை சேர்ந்த 4 வாலிபர்கள், 40 வயது பெண் மற்றும் காரணைத்தாங்கல் பகுதியை சேர்ந்த 4 ஆண்கள், 1 வயது குழந்தை 50, 26, 32 வயதுடைய 3 பெண்கள், செரப்பனஞ்சேரி பகுதிகளில் 42, 32, 34 மற்றும் 67 வயதுடைய ஆண்கள், வட்டம்பாக்கம் பகுதியில் 2 பெண்கள் மணிமங்கலம், சாலமங்கலம், நாட்டனசன்பட்டு பகுதியில் தலா ஒருவர் உள்ளிட்டவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானது.

இவர்களுடன் காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 322 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை 10 ஆயிரத்து 95 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களில் 6 ஆயிரத்து 757 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். 3,216 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நேற்று ஒரே நாளில் 5 பேர் உயிரிழந்தனர். இதனால் பலியானவர்களின் எண்ணிக்கை 122 ஆக உயர்ந்தது. 

தொடர்புடைய செய்திகள்

1. ஈரோடு மாவட்டத்தில் கொரோனாவுக்கு ஒரே நாளில் 3 பேர் பலி - மேலும் 140 பேருக்கு தொற்று
ஈரோடு மாவட்டத்தில் கொரோனாவுக்கு ஒரே நாளில் 3 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 140 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
2. வேலூரில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 4 பேர் பலி
வேலூர் தனியார் மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 4 பேர் ஒரே நாளில் உயிரிழந்தனர்.
3. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 85,362 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 85,362 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
4. தாராவியில் புதிதாக 15 பேருக்கு கொரோனா - சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 194 ஆக உயர்வு
தாராவியில் புதிதாக 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 194 ஆக உயர்ந்துள்ளது.
5. கொரோனாவால் பாதிக்கப்பட்ட டெல்லி துணை முதல் மந்திரி மனிஷ் சிசோடியா மருத்துவமனையில் அனுமதி
கடந்த 14 ஆம் தேதி டெல்லி துணை முதல் மந்திரி மனிஷ் சிசோடியாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

அதிகம் வாசிக்கப்பட்டவை