சேலத்தில், 66 பேருக்கு கொரோனா தொற்று


சேலத்தில், 66 பேருக்கு கொரோனா தொற்று
x
தினத்தந்தி 4 Aug 2020 3:45 AM IST (Updated: 4 Aug 2020 9:15 AM IST)
t-max-icont-min-icon

சேலத்தில் நேற்று புதிதாக 66 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சேலம்,

சேலம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. மாவட்டத்தில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது. நேற்று முன்தினம் கொரோனா வைரசால் 134 பேர் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில் நேற்று புதிதாக 66 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

அதாவது, சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 44 பேர், சங்ககிரியில் 4 பேர், வீரபாண்டியில் 3 பேர், மகுடஞ்சாவடி, மேச்சேரி, தலைவாசல், அயோத்தியாப்பட்டணம் ஆகிய பகுதிகளில் தலா 2 பேர், ஓமலூர், கொங்கணாபுரம், காடையாம்பட்டி, பனமரத்துப்பட்டி ஆகிய பகுதிகளில் தலா ஒருவரும் மற்றும் கோவை, ஈரோடு ஆகிய மாவட்டங்களில் இருந்து சேலம் வந்த தலா ஒருவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. மேலும் கேரளாவில் இருந்து சேலம் வந்த ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவர்கள் அனைவரும் சேலம் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 868 ஆக அதிகரித்துள்ளது. இதனிடையே சேலம் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனாவுக்கு சிகிச்சை சிகிச்சை பெற்று வந்த 17 பெண்கள் உள்பட 41 பேர் குணமடைந்ததால், நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.

சேலம் மத்திய சிறையில் பணியாற்றி வரும் சிறை வார்டன் ஒருவருக்கு கடந்த சில நாட்களாக உடல்நலம் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் கொரோனா பரிசோதனை செய்தார். இதில் அவருக்கு கொரோனா அறிகுறி இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து அவர் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Next Story