கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் குடும்பத்துடன் விவசாயி தற்கொலை முயற்சி


கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் குடும்பத்துடன் விவசாயி தற்கொலை முயற்சி
x
தினத்தந்தி 4 Aug 2020 5:33 AM GMT (Updated: 4 Aug 2020 5:33 AM GMT)

கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் குடும்பத்துடன் விவசாயி தற்கொலை முயன்றார்.

கள்ளக்குறிச்சி, 

சங்கராபுரம் வட்டம் சவேரியார்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் ஜேக்கப். விவசாயி. இவர் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் நேற்று கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலத்திற்கு வந்தார். பின்னர் அவர் குடும்பத்துடன் தீக்குளித்து தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து தான் கொண்டு வந்த கேனில் இருந்த மண்எண்ணெயை தன் மீதும், தன் குடும்பத்தினர் மீதும் ஊற்ற முயன்றார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், அவரை தடுத்து நிறுத்தி மண்எண்ணெய் கேனை பிடுங்கினர். இதையடுத்து தற்கொலைக்கு முயன்ற ஜேக்கப்பிடம் இன்ஸ்பெக்டர் விஜியகுமார், சப்-இன்ஸ் பெக்டர் மணிகண்டன் ஆகியோர் விசாரணை நடத்தினர். அப்போது அவர் கூறுகையில், எங்கள் ஊரில் அரசுக்கு சொந்தமான கிணற்றில் இருந்து எடுக்கப்பட்ட மண்ணை நான் அள்ளி பயன் படுத்தினேன். இதன் காரணமாக என் குடும்பத்தை கிராம காரியக்காரர்கள் ஊரை விட்டு தள்ளி வைத்து விட்டனர். இது தொடர்பாக போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தேன். ஆனால் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனிடையே ஆத்திரமடைந்த காரியக் காரர்கள் அதிக அளவில் அபராதம் விதித்ததோடு, எங்களை சாலையில் கூட நடக்கவிடாமல் தடுத்தனர். மேலும் எங்களை அடித்து கொலை செய்யவும் முயன்ற னர். இது போல் பலவிதமான தொல்லைகளை எங்களுக்கு கொடுத்து வருகின்றனர். எனவே எங்களை ஊரை விட்டு தள்ளி வைத்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார். இது தொடர்பாக புகார் மனு ஒன்றையும் போலீசாரிடம் அளித்தார். அதை பெற்றுக் கொண்ட போலீசார், இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்த னர். இதையடுத்து ஜேக்கப் தனது குடும்பத்தினருடன் அங்கிருந்து சென்றார்.

Next Story