கோவையில் வேகமாக பரவி வரும் கொரோனா: ஒரே நாளில் 15 பேர் பலி - பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,458 ஆக அதிகரிப்பு


கோவையில் வேகமாக பரவி வரும் கொரோனா: ஒரே நாளில் 15 பேர் பலி  - பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,458 ஆக அதிகரிப்பு
x
தினத்தந்தி 4 Aug 2020 11:24 AM IST (Updated: 4 Aug 2020 11:24 AM IST)
t-max-icont-min-icon

கோவையில் கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில், பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவந்த 15 பேர், ஒரே நாளில் பலியானார்கள். மேலும் கோவை மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் 5,458 ஆக அதிகரித்து உள்ளது.

கோவை,

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா பெருந் தொற்று, இந்தியாவிலும் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. தமிழகத்திலும் இந்த தொற்றால் தினமும் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். நோய் தடுப்புக்காக மத்திய- மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வந்தாலும் கொரோனாவின் வேகம் அதிகரித்துக்கொண்டே போகிறது.

இதுபோல் கோவை மாவட்டத்தில் கடந்த மே மாதம் வரை கட்டுக்குள் இருந்த கொரோனா பரவல், கடந்த 2 மாதங்களாக வேகமெடுத்துள்ளது. மாவட்ட நிர்வாகம் பல்வேறு தடுப்பு நடவடிக்கை எடுத்து வந்தாலும் பாதிக்கப் படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது.

இந்த நிலையில் கொரோனா வால் பாதிக்கப் பட்டு கோவையில் உள்ள இ.எஸ்.ஐ. மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 15 பேர் நேற்று முன்தினம் ஒரே நாளில் பலியானார்கள். அதன் விவரம் வருமாறு:-

கோவை சரவணம்பட்டி அன்னைவேளாங்கண்ணி நகரை சேர்ந்த 72 வயது முதியவர் 31-ந் தேதி கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனும திக்கப்பட்டார். பரிசோதனை யில் அவருக்கு தொற்று இருப்பது உறுதியானது. நேற்று முன்தினம் அவர் உயிரிழந்தார். வடவள்ளி இ.பி.காலனியை சேர்ந்த 70 வயது முதியவர் கொரோனா அறிகுறியுடன் கடந்த 1-ந் தேதி அரசு ஆஸ்பத்திரியில் அனு மதிக்கப்பட்டார். கொரோனா உறுதியான அவர் நேற்று முன்தினம் அவர் உயிரிழந்தார். எஸ்.எஸ்.குளம் பொன்னைய கார்டன் புதூரை சேர்ந்த 65 வயது முதியவர் 1-ந் தேதி கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா இருப்பது தெரிந்தது. இதற் கிடையே நேற்று முன்தினம் அவர் இறந்தார்.

மலுமிச்சம்பட்டியை சேர்ந்த 62 வயது முதியவர், சுக்கிரவார பேட்டையைச் சேர்ந்த 58 வயது ஆண் ஆகியோர் கடந்த 1-ந் தேதி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அவர் களுக்கு கொரோனா உறுதி யான நிலையில் நேற்று முன்தினம் உயிரிழந்தனர். ரங்கநாதபுரம் சிவகாமி நகரை சேர்ந்த 75 வயது முதியவர் நேற்றுமுன்தினம் மதியம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அவர் இரவே இறந்தார். அவருக்கு நடத்திய பரிசோதனையில் கொரோனா உறுதியானது.

சின்னவேடம்பட்டி சுக்கிர வார் பேட்டையை சேர்ந்த 40 வயது பெண் ஒருவர் கடுமை யான காய்ச்சலால் அரசு ஆஸ்பத்திரியில் நேற்று முன்தினம் மதியம் 1.30 மணியளவில் அனுமதிக்கப் பட்டார். ஆனால் அவர் அனுமதிக்கப்பட்ட அரை மணிநேரத்திலேயே உயிரிழந் தார். அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று பாதிப்பு கண்டு பிடிக்கப்பட்டது.

கோவை கணபதிபுதூர் 3-வது வீதியை சேர்ந்த 55 வயது ஆண் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து அவர் சிகிச்சைக்காக கடந்த மாதம் 27-ந் தேதி கோவை இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந் தார்.

ஆர்.எஸ்.புரத்தை சேர்ந்த 70 வயது முதியவர் கொரோனாவால் பாதிக்கப் பட்டு கடந்த 20-ந் தேதி இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். வயது முதிர்வு காரணமாக அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் பலனளிக்கவில்லை. எனவே நேற்றுமுன்தினம் அவர் பரிதாபமாக இறந்தார்.

ராம்நகர் பட்டேல் ரோட்டை சேர்ந்த 75 வயது மூதாட்டிக்கு கொரோனா அறிகுறி தென்பட்டது. இதையடுத்து அவர் கடந்த 30-ந் தேதி கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக் கப்பட்டார். அங்கு அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனை யில் கொரோனா இருப்பது தெரியவந்தது. இதற்கிடையே நேற்று முன்தினம் அவர் திடீரென உயிரிழந்தார். வீரகேரளம் பாலகணேசபுரம் பகுதியை சேர்ந்த 61 வயது முதியவர் ஒருவர் கடந்த 31-ந்தேதி தேதி கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப் பட்டார். அவருக்கு நடத்தப் பட்ட பரிசோதனையில் கொரோனா உறுதியானது. இந்த நிலையில் நேற்று முன்தினம் அவர் உயிரி ழந்தார்.

திருப்பூர் மாவட்டம் ஓடக்கரையை சேர்ந்த 45 வயது பெண் ஒருவர் கொரோனா அறிகுறியுடன் கடந்த 29-ந் தேதி கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதற்கிடையே நேற்று முன்தினம் அவர் உயிரிழந்தார். மேலும் அதே மாவட்டத்தை சேர்ந்த ஈஸ்வரன் மூர்த்தி லே-அவுட் பகுதியை சேர்ந்த 62 வயது முதியவர் ஒருவர் கடந்த 31-ந் தேதி கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கொரோனா பாதிப்பு இருந்த நிலையில் நேற்று முன்தினம் திடீரென உயிரிழந்தார்.

அவினாசி பள்ளிவாசல் வீதியை சேர்ந்த 52 வயது ஆண் கொரோனா அறிகுறி களுடன் நேற்று முன்தினம் காலை 9 மணிக்கு கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். திடீரென 11 மணியளவில் அவர் இறந்தார். அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனை யில் கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது.

இதேபோல் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த 54 வயது பெண் ஒருவர் உடல் நலக்குறைவால் நேற்று முன்தினம் மாலை 3 மணியளவில் கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப் பட்டார். ஆனால் இரவு 8 மணியளவில் அவர் உயிரிழந்தார். அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனை யில் கொரோனா இருப்பது உறுதியானது.

நேற்று முன்தினம் பலியான 15 பேரில் கோவை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் மட்டும் 11 பேர். இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனா வுக்கு பலியானோர் எண்ணிக்கை 95-ஆக உயர்ந்தது. கோவையில் ஒரே நாளில் 15 பேர் பலியான சம்பவம் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் நேற்று கோவை மாவட்டத்தில் ஒரே நாளில் 227 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. அன்னூர் போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வரும் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 10 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அன்னூர் போலீஸ் நிலையம் நேற்று 2-வது முறையாக மூடப்பட்டது.

இதுதவிர அன்னூர் காவலர் குடியிருப்பை சேர்ந்த 52 வயது ஆண், 11 வயது சிறுவன், 9 வயது சிறுமி, கோவில்பாளையம் காவலர் குடியிருப்பை சேர்ந்த 37 வயது ஆண், காந்திபுரம் சிறை மைதான காவலர் குடியிருப்பை சேர்ந்த 33 வயது பெண், கிணத்துக்கடவு வட்டாட்சியர் அலுவலகத்தில் பணியாற்றி வரும் 28 வயது வாலிபர், பீளமேட்டில் 8 பேர், சித்தாபுதூரில் 7 பேர் உள்பட 227 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் கோவை மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்து 458-ஆக உயர்ந்து உள்ளது.

கோவை இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரி, தனியார் மருத்துவமனைகள், கொரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 216 பேர் குணமடைந்து நேற்று வீடு திரும்பினர். இதுவரை 3 ஆயிரத்து 668 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். மேலும் 95 பேர் உயிரிழந்து உள்ளனர். தற்போது அரசு, தனியார் மறுத்துவமனைகள் மற்றும் கொரோனா சிகிச்சை மையங்களில் 1,695 பேர் பெற்று வருகின்றனர்.

Next Story